6th tamil model notes of lesson
lesson plan 2025 july 14
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
2.பருவம்
1
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
இயற்கை இன்பம் –
விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
கிழவனும் கடலும்
6.பக்கஎண்
27-32
7.கற்றல் விளைவுகள்
T-617 செய்தித்தாள்கள், இதழ்கள், கதைகள் இணையத்தில் காணப்படும்
தகவல்கள், கட்டுரைகள் போன்றவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு தமது விருப்பு
வெறுப்புகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துதல்.
8.திறன்கள்
முயற்சிகள்
ஓய்வதில்லை என்பதை உணர்த்தும் மீன் பிடிக்கப் போராடும் மீனவர் ஒருவரின் வாழ்வை
அறிதல்.
9.நுண்திறன்கள்
மொழிபெயர்ப்புக் கதையைப் படித்து உணரும்
திறன் பெறுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/04/kizhavanum-kadalum-6th-virivaanam.html
https://tamilthugal.blogspot.com/2021/08/1-2-kilavanum-kadalum-6th-tamil.html
https://tamilthugal.blogspot.com/2022/08/1-2-6th-tamil-mindmap-term-1-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2023/07/1-2_8.html
11.ஆயத்தப்படுத்துதல்
மீன்பிடித்தல் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த கடலின் சிறப்பைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
படக்
கதை குறித்து மாணவர் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
எண்பத்து நான்கு
நாள்களாக ஒரு மீனும் கிடைக்காத நிலையில் அன்று சாண்டியாகோ ஒரு பெரிய மீனைப்
பிடிக்கப் போராடியதை விளக்குதல்.
பசியோடும் சோர்வோடும் இருந்தாலும் பெரிய மீனை ஈட்டியால் குத்தி, படகின்
ஓரத்தில் கட்டினார். நாற்பது நாள்கள் தன்னுடன் மீன் பிடிக்க வந்த மனோலினிடம் சொல்ல
நினைத்தபோது சுறாக்கள் தின்றது போக எலும்பும் தலையும் மட்டுமே மிஞ்சியிருந்ததை
விளக்குதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கடலின் சிறப்புகளைக் கூறுதல்.
விடாமுயற்சி பற்றி விளக்குதல்.
படக்கதையின் சிறப்புகளைக் கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– சாண்டியாகோவிற்கு எத்தனை நாள்களாக
மீன் கிடைக்கவில்லை?
ந.சி.வி – படக்கதை பற்றி
நீங்கள் அறிந்தவை யாவை?
உ.சி.வி – கிழவனும் கடலும் என்னும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
கடல்காட்சி ஒன்றைப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.
சாண்டியாகோ
குறித்து உன் கருத்துகளை எழுதுக.
படக்கதை
பற்றிய உன் அனுபவங்களைக் கூறு.


