கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 09, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சொல் ஜூன் 29 - 2026

10th tamil model notes of lesson

lesson plan 2025 june 29

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

29-06-2026 முதல் 03-07-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுத ஊற்று – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

சொல்

6.பக்கஎண்

13 - 14

7.கற்றல் விளைவுகள்

T-1004 மொழி தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரும் நுட்பத்தையும் அதன் நயங்களையும் அறிந்து முறையாக மொழியைப் பயன்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழ் மொழியின் நயங்களையும் அழகினையும் அறிதல்.

9.நுண்திறன்கள்

மொழி, தொழிற்பெயர் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/06/pdf-1-eluthu-sol-10th-tamil-question.html 

https://tamilthugal.blogspot.com/2021/10/1-1-10th-tamil-eluthu-sol-one-word.html 

https://tamilthugal.blogspot.com/2023/06/1-10th-tamil-mind-map-moovakai-moli.html 

https://tamilthugal.blogspot.com/2021/07/1-eluthu-mozhi-tholirpeyar-10th-tamil.html 

https://tamilthugal.blogspot.com/2020/05/10th-tamil-ilakkanam-moovagai-mozhi.html 

https://tamilthugal.blogspot.com/2020/05/tholil-peyar-tamil-ilakkanam.html 

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த தொழிற்பெயர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

மூவகை மொழி, தொழிற்பெயர் வகைகளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மூவகை மொழி, தொழிற்பெயர் வகைகள் போன்றவற்றை விளக்குதல்.

          தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழிகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

          விகுதிபெற்ற தொழிற்பெயர், எதிர்மறைத் தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் வேறுபாட்டை அறிதல். தொழிற்பெயருக்கும் வினையாலணையும்பெயருக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       மூவகை மொழிகளை எழுதுக.

          ந.சி.வி – தொழிற்பெயர் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

உ.சி.வி –      பொதுமொழிக்கு எடுத்துக்காட்டுகள் 3 எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். பயிற்சிகள் அளித்தல்.

17.தொடர்பணி

இலக்கணத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்து வருதல்.


தமிழ்த்துகள்

Blog Archive