கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, March 13, 2021

தமிழ் எழுத்துகளுக்குப் பெயர் பிறந்த கதை TAMIL LETTERS NAME

தமிழ் எழுத்துகளுக்குப் பெயர் பிறந்த கதை 

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ,ஒ, ஓ, ஒள 
(உயிர் எழுத்துகள்)
நாக்கு வாயின் மேல்
அண்ணத்தைத் தொடாமலும்
காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும்
பயன்படுத்தி ஏற்படும்
இவ்வொலிகள் உயிர்
எழுத்துகள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம்,ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் 
(மெய் எழுத்துகள்)
நாக்கு வாயின் மேல்
அண்ணத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட
உடலின் பங்கு அதிகம்
என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர்
சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துகள்: 12

மெய் எழுத்துகள்: 18

உயிர்மெய் எழுத்துகள்:
216

ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துகள்

மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ்
என்று பெயர் எப்படி வந்தது என்பதைக்
காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும்
வல்லினம்.

ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும்
மெல்லினம்.

ய, ர, ல, வ, ழ, ள - ஆறும்
இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய
உயிர் ஒலிகள் அ(படர்க்கை),
இ(தன்னிலை), உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய் எழுத்துகளில்

வல்லினத்தில் ஒன்றும்,

மெல்லினத்தில் ஒன்றும்,

இடையினத்தில்

ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துகளை­த் தேர்ந்தெடுத்தனர்.

அவை த், ம், ழ் என்பவை.
இந்த மூன்று மெய்களுடன்
உலகின் முதல்
உயிரெழுத்துகளை வரிசைப்படுத்தி முறையே கூட்டி

த்+அ கூடி 'த' வாகவும்

ம்+இ கூடி 'மி' யாகவும்

ழ்+உ கூடி "ழு" வாகவும்

என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுள்ள
உகரத்தை நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.

தமிழ்த்துகள்

Blog Archive