தாவர இலைகளின் பெயர்கள்
ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’என்று பெயர்.
அகத்தி, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை
‘கீரை’ ஆகின்றது.
மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலை என்றும்,
நேராக வளர்பவைகளுக்குப் ‘பூண்டு’ என்றும் பெயர்.
அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன.
மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர்
‘தழை’.
நெல்,வரகு முதலியவற்றின் இலைகள்
‘தாள்’ ஆகும்.
சப்பாத்திக்கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர்
‘மடல்’.
கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘தோகை’ என்றாகின்றன.
தென்னை, பனை முதலியவற்றின் இலைகள்
‘ஓலை’ என்று சொல்லப்படுகின்றன.
கமுகின் இலைக்குப் பெயர் கூந்தல்.
இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல,தாவரவியல் அறிவியலும்
அடங்கி இருக்கிறது.