கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, March 25, 2021

தேளும் தவளையும் - குட்டிக்கதை thelum thavalaiyum kutty kathai tamil short story sirukathai

அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது.  அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மைக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது.

தவளையைக் கண்ட தேள், “தவளையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?” என்று கேட்டது.

"நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!", என்றது தவளை.

தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல ஆரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் நான் ஒரு நாளும், தவளையைக் கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்?

இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையைக் கொட்டிப் பார்க்க நினைத்தது.

தேள் தவளையின் முதுகில் கொட்டியது.    ஆனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது.

தேள் தவளையைப் பார்த்து, "தவளையாரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா?" என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, "எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை" என்று சொன்னது தவளை.

ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும்.  இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை.
ஓகோ; அப்படியா? என்று கேட்ட தேள்,  மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.

கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையைக் கொட்ட ஆரம்பித்தது.

தேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது.  தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

தமிழ்த்துகள்

Blog Archive