கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 31, 2021

நட்பு - குட்டிக்கதை natpu tamil short story kutty kathai

போரின் போது இரண்டு நண்பர்கள்
களத்தில் இருந்து சுட்டுக்
கொண்டிருந்தனர்.
எதிரிகள்
சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன்
மட்டும்
குண்டடி பட்டு விழுந்து உயிருக்கு போராடிக்
கொண்டிருந்தான்.
நான் என்
நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன்
எனக்கு உத்தரவு கொடுங்கள் என
படை தளபதியிடம்
கேட்டான்.
மறைந்து இருந்து தாக்குவது தான்
சரியான வழி, நீ அங்கு போவதால் உன்
உயிர்க்கும் தான் ஆபத்து என்றார் தளபதி.
மீண்டும் மீண்டும் கேட்க நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால்
எதுவும் நடந்துவிடப்
போவதில்லை என்று தளபதி கைவிரித்தார்.
அதை மீறியும் தன் நண்பனைக் காப்பாற்ற
ஓடினான்,
அவனைத் தோளில்
தூக்கிக் கொண்டு வரும்போது எதிரிகள்
சுட்டனர்.
இவனுக்கும் அடிபட்டது, அதையும்
மீறி அவனைத் தூக்கிக் கொண்டு வந்தான்.
படைத் தளபதி அவனைப் பரிசோதித்துப் பார்த்தார்
அவன் நண்பன் இறந்து போய் இருந்தான்.
நான் அப்போழுதே சொன்னேன் நீ
அவனைக் காப்பாற்றப் போவதால் எந்த
உபயோகமும் இல்லை, இப்போது பார்
நீயும் அடிபட்டுக் கிடக்கிறாய் என்றார்
தளபதி .
நான் அவனைக் காப்பாற்றப் போனது தான் சார் சரி என்றான். என்ன சொல்கிறாய் உன்
நண்பன் இறந்து கிடந்தான் நீ
சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் தளபதி .
நான் அங்கு போகும்போது என் நண்பன்
உயிருடன் தான் சார் இருந்தான்.
அவனை நான் தோளில் தூக்கி வரும்
போது ”என்னைக் காப்பாற்ற நீ வருவாய்
என்று எனக்குத் தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டுத் தான் சார்
இறந்தான்.
அந்த ஒரு வார்த்தை எனக்குப் போதும் சார்
இந்தக் காயம் எல்லாம்
எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.
இதுதான் உண்மையான நட்பு...!
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.

தமிழ்த்துகள்

Blog Archive