கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, March 20, 2021

சினம் - குட்டிக்கதை sinam kutty kathai tamil short story

அது ஒரு கிராமம். 
அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். 
ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்குப் போனான். 
அழகிய புள்ளிமான் ஒன்றைப் பிடித்து வந்தான்.
மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காகக் கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். 
ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. 
ஆனால் அது ஓடவில்லை. 
காணாமல் போய்விட்டது.
அவனுக்கோ ஆத்திரம். 
இந்த மானை யார் பிடித்துப் போயிருப்பார்கள். 
அவன் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்துப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோபமாக உருவெடுத்தது.
உடனே கடவுளைத் துதித்தான். 
கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று.
கடவுளும் வந்தார்...!
பக்தா என்னை அழைத்ததன் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.
அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்துச் சென்று விட்டார்கள். 
அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் கேட்கவில்லை. 
சினம் கண்ணை மறைத்தது.
தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். 
அந்த மானைக் காணவில்லை. 
அந்த மானைத் திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். 
அவனை என் கோபம் தீர அடிக்க வேண்டும்.
இதுதான் பக்தன் கேட்ட வரம்.
வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்குத் தயங்கினார்.
பக்தா.. உன் மானைத் திருப்பித் தருகிறேன். 
அது காணாமல் போனதற்குக் காரணமானவர் யார் என்று கேட்காதே.
இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். 
அதனால் அவனைப் பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாகக் கேட்டான்.
சரி.. நீ கேட்கும் வரத்தைத் தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது.
வருத்தம் வராது.
சரி.. தந்தேன் வரம். 
உன் மானைத் திருடிச் சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்துக் கொள். 
வரத்தைத் தந்த கடவுள் மறைந்து விட்டார்.
பக்தன் திரும்பிப் பார்த்தான்.
அங்கே நின்றது சிங்கம்.
பழிவாங்கும் கோபம் மறைந்தது. 
பயம் பிடித்துக் கொண்டது. 
கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. 
கண் மண் தெரியாமல் ஓடத் தொடங்கினான். 
கடவுளே என்னைக் காப்பாத்து.
கடவுள் சிரித்தார் … 
அவன் கதை முடிந்தது. 
இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. 
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தந்தது. 
கோபம் என்பது மனிதனின் இனிய பண்புகளைச் சுட்டு எரிக்கும் 
தீ.

தமிழ்த்துகள்

Blog Archive