தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Tuesday, November 30, 2021
Sunday, November 28, 2021
Saturday, November 27, 2021
Friday, November 26, 2021
Thursday, November 25, 2021
Wednesday, November 24, 2021
Tuesday, November 23, 2021
Saturday, November 20, 2021
Friday, November 19, 2021
தீபத்தின் வகைகள் THEEPAM VAKAIKAL
Thursday, November 18, 2021
Wednesday, November 17, 2021
Tuesday, November 16, 2021
Monday, November 15, 2021
Sunday, November 14, 2021
Saturday, November 13, 2021
Friday, November 12, 2021
Thursday, November 11, 2021
Wednesday, November 10, 2021
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 18.சொந்தக் கருத்தை எழுதுதல் Eighth Tamil refresher course answer key 8th
மதிப்பீட்டுச் செயல்பாடு
கீழக்காணும் துணைப்பாடப் பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
இந்திய வனமகன் (நேர்காணல்)
கட்டெறும்புகளா ? அவை கடித்தால் உடம்பில் கடுமையான எரிச்சல் ஏற்படுமே ? ஆமாம். ஆனால் என்ன செய்வது? மண்ணின் தன்மையை மாற்ற வேண்டுமே .அதற்காக நாள் தோறும் நூற்றுக்கணக்கான எறும்புகளைக் கொண்டுவந்து இங்கு விட ஆரம்பித்தேன் . கட்டெறும்புகள் ஊர்ந்து செல்லச்செல்ல மண்ணின் தன்மை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. காடுகளில் ஆங்காங்கே பச்சைப் பசும்புற்கள் தலைகாட்டத் தொடங்கின. அப்பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . அதன்பின்பு நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன. இவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு விதைகளும் உரமும் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன? கால்நடைகளை வளர்ப்பதுதான் என்னுடைய வேலை. அவற்றின் சாணத்தை ஒரு துளிகூட வீணாக்காமல் இயற்கை உரம் தயாரிக்கத் தொடங்கினேன் . ஒரு பழம் சாப்பிட்டால் கூட அதன் கொட்டையை வீசி எறியாமல் விதையாகச் சேர்த்து வைப்பேன் .பிறகு மழைக்காலம் தொடங்குவதற்குமுன் விதைகளை எடுத்து இத்தீவில் தூவத் தொடங்கிவிடுவேன் . இப்படி ஒவ்வோர் ஆண்டும் நான் தூவிய விதைகள்தாம் இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இக்காடு. மழை இல்லாத காலங்களில் செடிக்கு எப்படித் தண்ணீர் ஊற்றினீர்கள்? ஆற்றின் கரையோரம் இருந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதில் எனக்குச் சிக்கல் ஏற்படவில்லை . ஆனால் தொலைவில் இருந்த செடிகளுக்கு நீர் ஊற்றுவது சற்றுக் கடினமான செயலாக இருந்தது. அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தேன் . செடியைச்சுற்றி மூங்கில் குச்சிகளை நட்டுவைத்து அதில் ஒரு பானையைப் பொருத்தினேன் . அதில் ஒரு சிறுதுளை இட்டு, நீர் சொட்டுச் சொட்டாக வடிவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன் . பிறகு அதில் நீர் நிரப்பினால் ஒரு வாரத்திற்குச் சிக்கல் இருக்காது. இப்படித்தான் மற்ற செடிகளை வளர்த்து வந்தேன் .
வினாக்கள்
1. செடிகள், மரங்கள் அதிகம் வளர என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
நீர் ஊற்ற வேண்டும், மனிதர்கள், விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
2. மழையற்ற கோடைக்காலத்தில் தாவரங்களைப் பாதுகாக்க ஏற்ற வழிகளை எழுதுக.
சொட்டுநீர்ப் பாசன வசதி செய்ய வேண்டும்.
3. காடுகளால் நன்மை அடைவது மனிதர்களா? வன உயிரினங்களா? – இது சார்ந்து உங்கள் கருத்துகளை எழுதுக.
காடுகளால் நன்மை அடைவது மனிதர்களும்தான் வன உயிரினங்களும்தான்.
வன உயிரினங்களுக்குக் காடுகளே உறைவிடங்கள்.
காடுகளால் மனிதர்களுக்குப் பலவித மூலிகைகள், மரங்கள், தேன், மழை, மண்ணரிப்பைத் தடுத்தல், வன உயிரினங்கள் ஊருக்குள் வராமை போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 17.விளம்பரம் அளித்து வினாக்களை வினவுதல் Eighth Tamil refresher course answer key 8th
மதிப்பீட்டுச் செயல்பாடு
வினாக்கள்
1. கையுறைகள் அடங்கிய பெட்டி 4 வாங்கினால் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
அ) 150 ஆ) 200 இ) 250 ஈ) 300
ஆ) 200
2. விளம்பரத்தில் உள்ள மூலிகைப் பொருள்களில் பொருந்தாதது எது?
அ) ஆடாதொடை ஆ) அமுக்கரா சூரணம்
இ) சிறியாநங்கை ஈ) மாதுளை மணப்பாகு
இ) சிறியாநங்கை
3. சிறுதானியங்களில் பொருத்தமான இணை எது?
அ) சோளம் - சம்பா ஆ) கருப்பு கவுனி - சாமை
இ) வரகு – சாமை ஈ) மூங்கில் அரிசி - குதிரை வாலி
இ) வரகு – சாமை
4. சிறுதானிய இணையைத் தேர்ந்தெடு.
அ) மூங்கில் அரிசி ஆ) தினை
இ) மாப்பிள்ளை சம்பா ஈ) கருப்பு கவுனி
ஆ) தினை
5. எந்தப் பொருள் வாங்கினால் ‘சித்தர்களின் மூலிகை வைத்தியம்' என்னும் நூல் கிடைக்கும்?
அ) அரிசிவகைகள் ஆ) சிறுதானியங்கள்
இ) பழவகைகள் ஈ) மூலிகைப் பொடிகள்
ஈ) மூலிகைப் பொடிகள்
6. விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள முழக்கத் தொடர்களை எழுதுக.
இயற்கையை நேசி
இதமாய் சுவாசி
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 16.படித்துப் பொருளுணர்தல் Eighth Tamil refresher course answer key 8th
மதிப்பீட்டுச் செயல்பாடு
கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து விடையளிக்க .
சென்னையின் அடையாளம்
மே தின நினைவாகவும், உழைப்பைப் போற்றும் விதத்திலும் சென்னை , மெரீனாக் கடற்கரையில் நினைவுச்சிலை எழுப்பப்பட்டது. இது, உழைப்பாளர் சிலை என அழைக்கப்படுகிறது. இது சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலர் , தொழிலாளர் பெற்ற உரிமையை நினைவுகூறும் வகையில், சென்னை , மெரீனாக் கடற்கரையில், 1923இல் பொதுக்கூட்டம் நடத்தினார் . இதுவே , மே தினத்தையொட்டி இந்தியாவில் நடந்த முதல் கூட்டமாக மதிக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வின் நினைவாக, தமிழக முதல்வராக இருந்த காமராஜர், தன் ஆட்சிக் காலத்தில் ஒரு சிலை எழுப்ப உத்தரவிட்டார் . கடினமான உழைப்பில், நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பது போல் அச்சிலை உருவாக்கப்பட்டது. சென்னை , அரசு கவின்கலைக் கல்லூரி முதல்வராக இருந்த தேவி பிரசாத்ராய் சவுத்திரி அதை வடிவமைத்தார் . கவின்கலைக் கல்லூரியில் அப்போதைய காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு ஆகியோர் சிலைக்கான மாடலாக இருந்தனர். இச்சிலை, கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை, சென்னை மாகாணத்தின் அப்போதைய ஆளுநர் பீஷ்னுராம் மேதி, ஜனவரி 25, 1959இல் திறந்து வைத்தார் .
வினாக்கள்
1. உழைப்பாளர் சிலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
உழைப்பாளர் சிலை சென்னை , மெரீனாக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
2. உழைப்பாளர் சிலை எந்த நிகழ்வின் நினைவாக எழுப்பப்பட்டது?
தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலர் , தொழிலாளர் பெற்ற உரிமையை நினைவுகூறும் வகையில், சென்னை , மெரீனாக் கடற்கரையில், 1923இல் பொதுக்கூட்டம் நடத்தினார் . அதன் நினைவாக உழைப்பாளர் சிலை எழுப்பப்பட்டது.
3. இந்தியாவின் முதல் மே தினக் கூட்டம் யாரால் நடத்தப்பட்டது?
பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலரால் நடத்தப்பட்டது.
4. உழைப்பாளர் சிலைக்கு மாதிரிகளாக இடம் பெற்றவர்கள் யாவர்?
கவின்கலைக் கல்லூரியில் அப்போதைய காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு ஆகியோர் சிலைக்கான மாடலாக இருந்தனர்.
5. உழைப்பாளர் சிலை எழுப்ப உத்தரவிட்டவர் யார் ?
தமிழக முதல்வராக இருந்த காமராஜர், தன் ஆட்சிக் காலத்தில் உழைப்பாளர் சிலை எழுப்ப உத்தரவிட்டார் .
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 15.கட்டுரை எழுதுதல் Eighth Tamil refresher course answer key 8th
மதிப்பீட்டுச் செயல்பாடு
கீழ்க்காணும் குறிப்புச் சட்டகத்தைப் பயன்படுத்தித் தேசியப் பறவை மயில் பற்றி ஒரு பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதுக.
குறிப்புச் சட்டகம்
முன்னுரை
பொருளுரை
அழகு மயில்
மயிலின் உணவும் உறைவிடமும்
மயிலின் சிறப்பு
முடிவுரை
தேசியப் பறவை மயில்
முன்னுரை
“வானில் மிதக்கும்
கருமுகிலின்
வனப்பில் மயங்கி மகிழ்வுடனே
கானில் நின்று நீயாடும்
காட்சி கண்டு வியந்தேனே” என்று
வண்ணத் தோகை விரித்து ஆடும் மயிலின் அழகில் மயங்கிப் பாடிய புலவர் பலர் உண்டு.
கண்ணைக் கவரும் அவ்வண்ணப் பறவை பற்றி மேலும் அறிவோம்! வாருங்கள்!
அழகு மயில்
உலகில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் காணப்படும் மயில்களில் மூன்று
வகை உண்டு. இந்திய மயில்கள், பச்சை மயில்கள் மற்றும் வெள்ளை மயில்கள். ஆண் மயிலுக்கு நீண்ட தோகை உண்டு. அழகிய கண்களுடன் தலையில் சிறு கொண்டை
காணப்படும். எத்தியோப்பிய மயில்களுக்கு இரட்டைக் கொண்டைகளும் உண்டு. கோழியினப்
பறவையான மயில் நீண்ட கழுத்தைக் கொண்டது. நீலம், சிவப்பு, பச்சை வண்ணங்களுடன் ஒவ்வொரு அசைவிற்கும் மயில் திரும்பும் அழகே அழகு! கருமேகம்
சூழ்ந்து விட்டால் தன் வண்ணத் தோகையை விரித்து ஆடும் மயில். இக்காட்சிக்கு மனதைப்
பறி கொடுக்காதவர்கள் எவருமில்லை!
மயிலின் உணவும் உறைவிடமும்
மயில் ஓர் அனைத்துண்ணி ஆகும். தானியங்கள், புழு பூச்சிகள், அத்திப் பழங்கள், கிழங்குகள். தேன். கரையான்கள், தவளைகள்,
பாம்புகள் என இதன் உணவிற்கு நீண்ட பட்டியல் உண்டு. குறிஞ்சி நிலப் பறவையான மயில் காடுகளிலும் மலைப்
பகுதிகளிலும் வாழும். மயில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வாழும். குறிஞ்சி
நிலத் தெய்வமான முருகனின் வாகனம் மயிலே!
மயிலின் சிறப்பு
அக்காலத்திலேயே சாலமோன் அரசருக்கு இந்திய மன்னர்கள் மயில் தோகையைப்
பரிசளித்து இருக்கிறார்கள். திருக்குறளிலும் சங்க இலக்கியங்களிலும் மயில் தோகை
பற்றிய செய்திகள் உள்ளன. கி.பி 1963இல் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. கி.பி1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியச் சட்டப்படி மயிலை வேட்டையாடுவது குற்றமாகும்.
ஆபத்தைக் கண்டால் அதிக ஒலி எழுப்பும் பறவை மயில் ஆகும். இவ்வொலியை அகவல், ஆலல், ஏங்கல் என்கிறோம்.
முடிவுரை
பண்டைய மன்னர்கள் தங்கள் படைக்கலன்களை
அழகுபடுத்தி வைப்பதற்கு மயிற்பீலியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சமணர்களும்
இந்துக்களும் மயிலையும் மயிற்பீலியையும் கடவுளாக மதித்துப் போற்றுகிறார்கள்.
“இயற்கை அன்னை இப் பெண்கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்
உனக்கோ குறையொன்றில்லாக் கலாப மயிலே
நிமிர்ந்து நிற்க நீள் கழுத்தளித்தாள்”.
- என்கிறார் பாவேந்தன் பாரதிதாசன்.
பல்வேறு சாதி, மதங்கள், இனக்குழுக்கள் வாழும் நம் இந்தியாவின் தேசியப் பறவை பல வண்ணங்கள் கொண்ட மயில் என்பது பொருத்தம் தானே?
மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரிப் பள்ளி, ம.ரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்.
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 14.அறிவிப்பை எழுதிப் பழகுதல் Eighth Tamil refresher course answer key 8th
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 13.மனவரைபடம் உருவாக்குதல் Eighth Tamil refresher course answer key 8th
மதிப்பீட்டுச் செயல்பாடு
கீழ்க்காணும் பத்தியைப் படித்து மனவரைபடம் வரைக.
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 12.உரையாடல் எழுதுதல் Eighth Tamil refresher course answer key 8th
மதிப்பீட்டுச் செயல்பாடு
பின்வரும் செய்தியைப் படித்து ‘வானொலியில் விளம்பர உரையாடலாக’ எழுதுக.
சென்னை வானொலியில்
உழைப்பாளர் தினச் சிறப்பு நிகழ்ச்சிகள்
சென்னை , மே .1
சென்னை வானொலியில் இன்று (சனிக்கிழமை ) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் ஒலிபரப்பாகின்றன. காலை 7 மணிக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பங்கு பெறும் சிறப்புப் பேட்டி ஒலிபரப்பாகிறது.
அதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்குச் சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குநர் , விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. நண்பகல் 12 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில், ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் புகழ் கிராமியப்பாடகி கிடாக்குழி மாரியம்மாள் கலந்து கொள்கிறார் .
பிற்பகல் 2மணிக்கு உழைப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்திய தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இடம்பெறுகிறது.
கலா - மாலா, சென்னை வானொலியில் உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து உனக்குத் தெரியுமா?
மாலா - தெரியுமே. காலை 7 மணிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிறப்புப் பேட்டி ஒலிபரப்பாகிறது.
கலா - அப்படியா, தவறாமல் கேட்க வேண்டும். அடுத்து ...
மாலா - காலை 10 மணிக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி.
கலா - நேற்று தான் பாடப்புத்தகத்தில் அவர் குறித்து படித்தேன். அவசியம் கேட்க வேண்டும். அடுத்து ...
மாலா - நண்பகல் 12 மணிக்கு கிடாக்குழி மாரியம்மாள் நிகழ்ச்சி.
கலா - கிராமியப் பாடகியாச்சே, அருமையாக இருக்கும். அடுத்து...
மாலா - பிற்பகல் 2 மணிக்கு உழைப்பின் மகத்துவம் கூறும் திரைப்படத் தொகுப்பு.
கலா - அத்தனையும் அருமையான நிகழ்ச்சிகள், தவறாமல் கேட்டுவிடுகிறேன். நன்றி.
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 11.மயங்கொலிச்சொற்கள் Eighth Tamil refresher course answer key 8th
மதிப்பீட்டுச் செயல்பாடு - 1
பாடலைச் சரியான ஒலிப்புடன் படித்துப் பழகுக.
அன்னப் பறவை நடைநடந்து
அன்பை விதைத்துச் செல்வோமா?
வண்ணத் திரையின் காட்சிகளை
வரைந்து நாமும் மகிழ்வோமா?
முந்திச் செல்லும் மேகம் போல்
முன்பே மழையைப் பொழிவோமா ?
அந்தி வானக் கதிரோனாய்
அழகை வாரி இறைப்போமா?
- பாவலர்மணி இராம வேல்முருகன், வலங்கைமான்
மதிப்பீட்டுச் செயல்பாடு - 2
பின்வரும் தொடர்களுக்கு ஏற்ற சொல்லைப் பொருத்திப் படித்துப் பழகுக.
(சொல்லிப் , எழிலும், பிள்ளை , பாலும், கொள்ளை )
நல்ல பிள்ளை மெல்லத் தவழும்.
பிள்ளைச் செல்வம் கொள்ளை இன்பம்.
பள்ளிப்பிள்ளை சொல்லிப் பழகும்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
அழகும் எழிலும் வலுவும் பொலிவும்.
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 10.நிறுத்தக் குறியிட்டு எழுதுதல் Eighth Tamil refresher course answer key 8th
மதிப்பீட்டுச் செயல்பாடு 1
பின்வரும் படங்களிலிருந்து காற்புள்ளி அமையுமாறு தொடர் அமைத்து எழுதுக.
எனக்குப் பிடித்த காய்கறிகள் பீட்ரூட், காரட், முட்டைக்கோசு, தக்காளி.
இப்படத்தில் மரம், பறவை, விலங்கு ஆகியன உள்ளன.
மதிப்பீட்டுச் செயல்பாடு - 2
வியப்புக்குறி அமையுமாறு தொடரமைக்க.
தமிழ்த்துகள்
-
10 th tamil model notes of lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 28-10-2024 முதல் 30-10-2024 2.பாடம் தமிழ் 3....
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-11-2024 முதல் 09-11-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
10 th Tamil model notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 11-11-2024 முதல் 15-11-2024 2.பாடம் தமிழ் 3....
-
9 th tamil model notes of lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 28-10-2024 முதல் 30-10-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
9 th Tamil model notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 11-11-2024 முதல் 15-11-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
10th Tamil model notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 18-11-2024 முதல் 22-11-2024 2.பாடம் தமிழ் 3...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-11-2024 முதல் 09-11-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
8th tamil model notes of lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 28-10-2024 முதல் 30-10-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
9th Tamil model notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 18-11-2024 முதல் 22-11-2024 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-11-2024 முதல் 09-11-2024 2.பாடம் தமிழ் 3.அலக...
Blog Archive
-
▼
2021
(1581)
-
▼
November
(131)
- நோயும் மருந்தும் எட்டாம் வகுப்பு தமிழ் கவிதைப்பேழை...
- காவல்காரர் பாடல் நான்காம் வகுப்பு தமிழ் இரண்டாம் ப...
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு விழுப்புரம் மாவ...
- பத்தாம் வகுப்பு 2021 அலகுத்தேர்வு 1 வினாத்தாள் 50 ...
- மரக்கன்றுகள் வேண்டி வனக்காவலருக்கு விண்ணப்பம் 8ஆம்...
- மரக்கன்றுகள் வேண்டி வனக்காவலருக்கு விண்ணப்பம் 8ஆம்...
- 12 ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பொதுத்தேர்வு வினாத்தாள...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக 50 மதிப்பெண்கள...
- 12ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் 2021-2...
- புத்தகம் வேண்டிப் பதிப்பகத்தாருக்கு விண்ணப்பம் வகு...
- புத்தகங்கள் வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் LE...
- போட்டியில் வென்ற நண்பனுக்கு வாழ்த்து மடல் கவிதை பத...
- பத்தாம் வகுப்பு தமிழ்க் கடிதம் போட்டியில் வென்ற நண...
- நவம்பர் 29 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் பு...
- நவம்பர் 29 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பு...
- நவம்பர் 29 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 8 தமிழ் பு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 அலகுத்தேர்வு வினாத்தா...
- பத்தாம் வகுப்பு தமிழ் நவம்பர் திருப்புதல் தேர்வு வ...
- 10 தமிழ் திருப்புதல் மாதிரி வினாத்தாள் 2021 குறைக்...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி திருப்புதல் தேர்வு வி...
- தீபத்தின் வகைகள் THEEPAM VAKAIKAL
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- நவம்பர் 22 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் பு...
- நவம்பர் 22 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பு...
- நவம்பர் 22 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 8 தமிழ் பு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 அலகுத்தேர்வு வினாத்தா...
- நவம்பர் மாத வாராந்திரத் தேர்வு தமிழ் 10ஆம் வகுப்பு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 16,17,18 ...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல்1 அலகுத்தேர்வு வினாத்தாள...
- திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் 12ஆம் வகுப்பு தமிழ்
- திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு சம...
- திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு அற...
- திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு கண...
- திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு ஆங...
- திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ்
- நவம்பர் 22 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 9 தமிழ் ஏற...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 13,14,15 ...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 10,11,12 ...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 7,8,9 விட...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 4,5,6 விட...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 1,2,3 விட...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- நவம்பர் 15 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குறிப்ப...
- நவம்பர் 15 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குறிப்ப...
- நவம்பர் 15 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குறிப்ப...
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்கு...
- பத்தாம் வகுப்பு தேசிய அடைவுத் தேர்வு மாதிரி வினாத்...
- எட்டாம் வகுப்பு தேசிய அடைவுத் தேர்வு மாதிரி வினாத்...
- தேசியப் பறவை மயில் தமிழ்க்கட்டுரை thesiya paravai ...
- தேசியப்பறவை மயில் தமிழ்க்கட்டுரை வகுப்பு 8 MAYIL T...
- சொலவடைகள் 2 ஏழாம் வகுப்பு தமிழ் விரிவானம் 7th tami...
- சொலவடைகள் 1 ஏழாம் வகுப்பு தமிழ் விரிவானம் 7th tami...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 13,14,15,16...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 9,10,11,12 ...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 5,6,7,8 விட...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 1,2,3,4 விட...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- ஆறாம் வகுப்பு தமிழ் அடிப்படை இலக்கணம் ஆன்லைன் தேர்...
- நவம்பர் 15 மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 9 தமிழ் பெ...
- நவம்பர் 8 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குறிப்பு...
- நவம்பர் 8 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குறிப்பு...
- நவம்பர் 8 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குறிப்பு...
- HITECH LAB ONLINE 10th basic quiz 8 all subjects q...
- ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 13,14,15,16...
- ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 9,10,11,12 ...
- ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 5,6,7,8 விட...
- ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
-
▼
November
(131)