கொடுக்கப்பட்ட ஓர் எழுத்தினைக் கொண்டு சொற்களை உருவாக்குதல்.
(எ.கா.)
எழுத்தானது முதலிலோ இடையிலோ இறுதியிலோ வருமாறு சொற்களை எழுதுக.
தை – தைமாதம், புதையல், விடுகதை , கவிதை , தையல், விதை , கதை
எழுத்தானது முதலிலோ இடையிலோ இறுதியிலோ வருமாறு சொற்களை எழுதுக.
மா - மாலை, அம்மா, கண்மாய், மான், மாம்பழம்.
மை - மைனா, கருமை, மைசூர், கண்மை, உண்மை.
கை _ கைமாறு, மங்கை, கைதி, தமக்கை, தங்கை.
சொல்லைக் கண்டுபிடித்தல்
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு சொல்லைக் கண்டுபிடித்தல்.
(எ.கா.) பூக்கள் சேர்ந்தது ஆரம்
பொழுது சாயும் நேரம்
விடை - மாலை
(வினா) புதிர்
பஞ்சிலிருந்து கயிறாக வருவது.
படிக்கும் அறையில் இருப்பது.
நூல்
ஆற்றின் ஓரம்.
ஆடைகளில் படிவது.
கறை
அரிசி அளக்கப் பயன்படுவது.
படி
சொல்லுக்குள் சொல்
ஒரு சொல்லுக்குள் இயல்பாய் அமைந்த, அமைந்திருக்கின்ற மற்றொரு
சொல்லைக் கண்டுபிடியுங்கள்.
(எ.கா.) வெங்காயம் – (காயம்) புண்
இடையூறு - (இடை ) உறுப்பு
கோபுரம் - கோ
தலைநகரம் - தலை
பள்ளிக்கூடம் - படம்
தீவினை - தீ
கடையெழு - கடை
மதிப்பீட்டுச் செயல்பாடு
தொகைச் சொல்லை விரித்து எழுதுக.
(எ.கா.) மூவேந்தர் - சேர, சோழ, பாண்டியர்
நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.
ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பாலை.
முக்கனி - மா, பலா, வாழை.
அறுசுவை - இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு.
நவதானியங்கள் - நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை.
ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்கச் செய்க.
(எ.கா.) குதிரை - குதி, திரை , குரை
புதுவயல் - புயல், புல், வயல்.
பணிமனை - பணி, மனை, மணி, பனை.
பூங்காவனம் - பூ, பூங்கா, கா, கானம்.
கழுகுமலை - கழுகு, மலை, கலை, குலை.
தலைநகரம் - தலை, நகரம், தகரம், தரம், நகம், நம், கலை.
ஒரு பொருள் தரும் பல சொற்களை எழுதுக.
(எ.கா.) திரு - தெய்வம், செல்வம்
ஐ _ அழகு, அம்பு, தலைவன், அரசன், கடவுள்.
திங்கள் _ நிலவு, மாதம், கிழமை.
ஒளி _ சோதி, விளக்கம், மின்னல், வெயில், புகழ், அழகு.
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களைத் தொகுத்துப் பொருள் எழுதிச் சொற்றொடரில் அமைக்க.
(எ.கா) பூ - மலர் - பெண்கள் தலையில் மலர்களைச் சூடிக் கொள்வார்கள்.
கா - காப்பாற்று - பாம்பைக் கண்டு காப்பாற்று என கத்தினான்.
வா - வருகை - என் நண்பனின் வருகை எனக்கு மகிழ்வைத் தந்தது.
போ- செல் - பள்ளிக்குச் செல் என்றார் அப்பா.
பா - பாட்டு - பயணத்தில் பாட்டு கேட்பது எனக்குப் பிடிக்கும்.
தீ - நெருப்பு - சூரிய ஒளி நெருப்பு போலச் சுட்டது.