கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, November 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 7.அலுவலகக் கடிதம் எழுதுதல் Eighth Tamil refresher course answer key 8th

 

மதிப்பீட்டுச் செயல்பாடு

மரக்கன்றுகள் வேண்டி வன அலுவலருக்கு எழுதும் விண்ணப்பத்தினை நிறைவு செய்க.

மரக்கன்றுகள் வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர்

    ப.எழிலன்,

    ஏழாம் வகுப்பு,

    அரசு மேல்நிலைப்பள்ளி,

    ஆவுடையாபுரம்,

    விருதுநகர் மாவட்டம்.

பெறுநர்

    மதிப்பிற்குரிய வன அலுவலர் ,

    வன அலுவலகம்,

    விருதுநகர்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : மரக்கன்றுகள் வேண்டுதல் சார்பாக...

    தற்போது புவியானது மிகவும் விரைவாக வெப்பமயமாக மாறிக் கொண்டு வருகின்றது. புவியின் வெப்பத்தைக் குறைக்கவும் இயற்கையைப் பாதுகாக்கவும் மரங்கள் வளர்ப்பது அவசியம். எங்கள் ஊரில் வீட்டிற்கொரு மரம் நட்டு வளர்க்க ஊர்ப்பொது மக்கள் முடிவெடுத்துள்ளார்கள். எனவே எங்கள் ஊருக்கு மரக்கன்றுகள் வழங்கி இயற்கையைப் பாதுகாக்க உதவுமாறு ஊர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

இப்படிக்கு,

ப.எழிலன்.

இடம் : ஆவுடையாபுரம்,

நாள் : 19-11-2021

தமிழ்த்துகள்

Blog Archive