மதிப்பீட்டுச் செயல்பாடு
கீழ்க்காணும் அறிவிப்பைப் படித்துக் குறுஞ்செய்தியாகவும் தோழன்/தோழிக்குக் கடிதமாகவும் எழுதுக.
அறிவிப்பு
கொரோனாத் தொற்று அதிகரித்திருப்பதால் மாணவ மாணவிகள் வகுப்பறைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவவேண்டும். உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறையிலும் வெளியே செல்லும் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர் .
குறுஞ்செய்தி
வகுப்பறைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல். அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவுதல். முகக் கவசம் அணிதல் அவசியம்.
தோழிக்குக் கடிதம்
7, முல்லை நகர்,
அருப்புக்கோட்டை,
25-11-2021
அன்புள்ள தேன்மொழி,
வணக்கம், நான் நலம், நீ நலமா? நீண்ட இடைவெளிக்குப்பிறகு நம் பள்ளி திறக்க உள்ளதால் நம் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து ஓர் அறிவிப்பு வந்துள்ளது. நாம் அனைவரும் வகுப்பறைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவவேண்டும். உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்து கொரோனாத் தொற்று காலத்தில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நேரில் சந்திப்போம்.
இப்படிக்கு,
உன் அன்புள்ள தோழி,
பா.இனியா.
உறைமேல் முகவரி
பெறுநர்
க.தேன்மொழி,
25, மருதம் வீதி,
பாலையம்பட்டி.