மதிப்பீட்டுச் செயல்பாடு - 1
பாடலைச் சரியான ஒலிப்புடன் படித்துப் பழகுக.
அன்னப் பறவை நடைநடந்து
அன்பை விதைத்துச் செல்வோமா?
வண்ணத் திரையின் காட்சிகளை
வரைந்து நாமும் மகிழ்வோமா?
முந்திச் செல்லும் மேகம் போல்
முன்பே மழையைப் பொழிவோமா ?
அந்தி வானக் கதிரோனாய்
அழகை வாரி இறைப்போமா?
- பாவலர்மணி இராம வேல்முருகன், வலங்கைமான்
மதிப்பீட்டுச் செயல்பாடு - 2
பின்வரும் தொடர்களுக்கு ஏற்ற சொல்லைப் பொருத்திப் படித்துப் பழகுக.
(சொல்லிப் , எழிலும், பிள்ளை , பாலும், கொள்ளை )
நல்ல பிள்ளை மெல்லத் தவழும்.
பிள்ளைச் செல்வம் கொள்ளை இன்பம்.
பள்ளிப்பிள்ளை சொல்லிப் பழகும்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
அழகும் எழிலும் வலுவும் பொலிவும்.