மதிப்பீட்டுச் செயல்பாடு - 1
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
மகிழன் காலையில் எழுந்தான் . தன் காலைக் கடன்களை முடித்தான் . காலைஉணவு சாப்பிட்டான் . 8.30 மணிக்குப் பள்ளி பேருந்தில் ஸ்கூலுக்குச் சென்றான் . பள்ளியில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டான் . தனது வகுப்பில் டீச்சரிடம் அனைத்துப் பாடங்களையும் சூப்பராகப் படித்தான் . மதியஉணவு இடைவேளையில் பிரண்சுடன் லஞ்ச் சாப்பிட்டான் . மதியம் கணிதப் பாடவேளையில் ஆசிரியர் கொடுத்த ஆக்டிவிட்டி செய்தான் . ஈவினிங் 4.30 மணிக்கு ஸ்கூல்பெல் ஒலித்தது. பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்குச் சென்றனர். வீட்டிற்குச் செல்லும் வழியில் ரோட்டில் செல்லும் பஸ், கார் , லாரி, மிதிவண்டி போன்ற வாகனங்களைக் கண்டு இரசித்தான் . வீட்டிற்குச் சென்றவுடன் யுனிபார்மை மாற்றிக் கை , கால்களைக் கழுவினான் . மம்மி கொடுத்த ஸ்நாக்சைச் சாப்பிட்டுவிட்டு தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றான் .
ஆங்கிலச் சொற்கள் தமிழ்ச் சொற்கள்
ஸ்கூலுக்கு பள்ளிக்கூடத்திற்கு
டீச்சரிடம் ஆசிரியரிடம்
சூப்பராக சிறப்பாக
பிரண்சுடன் நண்பர்களுடன்
ஆக்டிவிட்டி செயல்பாடு
ஈவினிங் மாலை
ஸ்கூல்பெல் பள்ளி மணி
ரோட்டில் சாலையில்
பஸ் பேருந்து
கார் மகிழுந்து
லாரி சரக்குந்து
யுனிபார்ம் சீருடை
மம்மி அம்மா
ஸ்நாக்ஸ் நொறுக்குத்தீனி
மதிப்பீட்டுச் செயல்பாடு - 2
படத்தைப் பார்த்து ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.