கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, November 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 3.எதிர்ச்சொல் அறிதல் Eighth Tamil refresher course answer key 8th

 

மதிப்பீட்டுச் செயல்பாடு - 1

கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதில் உள்ள சொற்களுக்கான எதிர்ச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

மூத்த தமிழ்மொழி இளமையானது; எளிமையானது; இனிமையானது; வளமையானது; காலத்திற்கேற்பத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வது; நினைக்கும் போதே நெஞ்சில் இனிப்பது; நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது; தொன்மையான தமிழ்மொழியின் சிறப்பை அறியலாம், வாருங்கள்.

மூத்த X ______________________ இளைய

இளமை X ______________________ முதுமை

எளிமை X ______________________ கடினம்

இனிமை X ______________________ கடுமை

வளமை X ______________________ வறுமை

தன்னை X ______________________ பிறரை

பிறரை X ______________________  தன்னை

கொள்வது X ______________________ கொடுப்பது

நினைக்கும் X ______________________ மறக்கும்

இனிப்பது X ______________________ கசப்பது

வாழ்வு X ______________________ தாழ்வு

தொன்மை X ______________________ புதுமை

சிறப்பு X ______________________ இழிவு

வாருங்கள் X ______________________ செல்லுங்கள்

மதிப்பீட்டுச் செயல்பாடு - 2

கீழ்க்காணும் பாடலைப் படித்து அதில் அமைந்துள்ள நேரெதிர் சொற்களைக் கண்டறிந்து எழுதுக .

நற்சொல் நவிலாது தீச்சொல் நவின்றால்

இனியன நடவாது இன்னாதன நடந்திடும்

நல்லன நேராது அல்லாதன நேர்ந்திடும்

பகையது பெருகி நட்பது குறையும்!

- கவிஞர் நளினா கணேசன் .

நற்சொல் X தீச்சொல்

நவிலாது X நவின்றால்

இனியன X இன்னாதன

நடவாது X நடந்திடும்

நல்லன X அல்லாதன

நேராது X நேர்ந்திடும்

பகை X நட்பு

பெருகி X குறையும்

மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

கட்டத்தில் கலைந்துள்ள நேர் எதிர்ச் சொற்களில் எது எதற்கு எதிரானது எனத் தேர்ந்தெடுத்து எழுதுக.











நீதி X அநீதி

ஆக்கம் X அழிவு

ஆதி X அந்தம்

செயற்கை X இயற்கை

சிற்றூர் X பேரூர்

அகம் X புறம்

தமிழ்த்துகள்

Blog Archive