கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, November 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 5.சொற்களை இணைத்துத் தொடர் அமைத்தல் Eighth Tamil refresher course answer key 8th

 

மதிப்பீட்டுச் செயல்பாடு - 1

சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக.

இணையம் காலை வகுப்பு

ஆசிரியர் குறிப்பு குறிப்பேடு

படங்கள் மகிழ்ச்சி தெளிவு

(எ.கா.) இணைய வகுப்பில் ஆசிரியர் கூறுவதைக் குறிப்பெடுத்துக் கொண்டான் .

ஆசிரியரின் காலை வகுப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

இணைய வகுப்பில் ஆசிரியர் காண்பித்த படங்கள் தெளிவாக இருந்தன.

இணையத்தில் குறிப்பு எடுப்பது குறித்து ஆசிரியர் தெளிவாகக் கூறினார்.

ஆசிரியரின் இணைய வகுப்பு தெளிவாக இருந்ததால் மகிழ்ச்சியடைந்தோம்.

வகுப்பு ஆசிரியர் இணையம் மூலம் படங்கள் காட்டி குறிப்பேட்டில் தெளிவாக எழுதச் சொன்னார்.

மதிப்பீட்டுச் செயல்பா டு - 2

கோடிட்ட இடங்களில் ஒரே சொல்லைக் கொண்டு தொடரினை நிரப்புக.

(எ.கா.) மாலா பூவைப் பறித்தாள். அவளிடமிருந்து லதா அதனைப் பறித்தாள்.

1. தந்தை , தனக்குக் கொடுத்த நிலத்தில் கால் பங்கு இடத்தினைக் கால் 

பந்து விளையாட்டு மைதானம் அமைக்க தானமளித்தார் செந்தில்.

2. பூக்கடையில் மாலை நேரத்தில் சென்றாலும் மாலை வாங்கலாம்.

3. இன்பம் தரும் இனிய மொழி தமிழ் . ஆதலால் அனைவரும் விரும்பித் தமிழ் கற்பீர் என்றார் ஆசிரியர் .

4. பல நூல் கற்ற சான்றோர்கள் அந்நூல் கூறிய படி வாழ்ந்தனர்.

மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

முறை மாறியுள்ள சொற்களை முறைப்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.

(எ.கா.) முதல் விளையாட்டு கலையரசன் பரிசு போட்டியில் பெற்றான் .

கலையரசன் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றான் .

1. நந்தினியும் இணைய மாலினியும் கலந்துரையாடினர் வகுப்பில்

நந்தினியும் மாலினியும் இணைய வகுப்பில் கலந்துரையாடினர்.

2. பிறந்தநாள் எனக்குப் அம்மா பரிசாக வாங்கிக் சட்டையை இந்தச் என் கொடுத்தார் .

எனக்குப் பிறந்தநாள் பரிசாக என் அம்மா இந்தச் சட்டையை வாங்கிக் கொடுத்தார்.

மதிப்பீட்டுச் செயல்பாடு - 4

சொற்களை இணைத்துத் தொடராக்குக.

நான் பள்ளிக்குச் சென்று வந்தேன்.

கண்ணன் பள்ளிக்குச் சென்று வந்தான்.

மாலதி பள்ளிக்குச் சென்று வந்தாள்.

மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வந்தனர்.

தமிழ்த்துகள்

Blog Archive