கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, November 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 6.செய்யுள் மையக்கருத்து பொருள் அறிதல் Eighth Tamil refresher course answer key 8th

 

மதிப்பீட்டுச்செயல்பாடு - 1

வெற்றி மேல் வெற்றிவர விருதுவர பெருமை வர

மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்

பெற்ற தாயின் புகழும் பிறந்த மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்.

    - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

மேற்கண்ட பாடலின் மையக் கருத்தினை எழுதுக.

மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெற வேண்டும். பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும்.

மதிப்பீட்டுச்செயல்பாடு - 2

பாடலைப் படித்து அதன் சொற்பொருளை எழுதுக.

யாவரும் சமம்

சுற்றம் விலக்கி வாழாதே !

சூதின் பக்கம் போகாதே !

உற்றார் உறவைப் பழிக்காதே !

ஊரார் பழிக்க நடவாதே !

பெற்றோர் நோகப் பேசாதே !

பெரியோர் பாதை விலகாதே !

கற்றோர் நட்பை உதறாதே !

கவசம் அதுவே மறவாதே !

- பாவலர்மணி இராம வேல்முருகன், வலங்கைமான்

சொற் பொருள் எழுதுக.

சுற்றம் - உறவுகள்

சூது - சூதாட்டம்

கவசம் - பாதுகாப்பு

பழி - குற்றம்

கற்றோர் படித்தோர்

தமிழ்த்துகள்

Blog Archive