ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
14-11-2022 முதல் 18-11-2022
2.பருவம்
2
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
பாடறிந்து ஒழுகுதல் – விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
மனம் கவரும் மாமல்லபுரம், மயங்கொலிகள்
6.பக்கஎண்
33-40
7.கற்றல் விளைவுகள்
T-614 புதிய சொற்களைத்
தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப்
பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.
8.திறன்கள்
தமிழரின் சிற்பக்கலைச் சிறப்பையும் பிற
கலைகளையும் அறியும் திறன்
மயங்கொலி வேறுபாடு அறிந்து மொழியைச் சரியாகப்
பயன்படுத்தும் திறன்.
9.நுண்திறன்கள்
காலத்தால் அழியாத கலைச் செல்வங்களை அறிந்துகொள்ள
முயலும் திறன்.
மயங்கொலிகள் குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
தமிழ்த்துகள்: மனம் கவரும் மாமல்லபுரம் வகுப்பு 6 QR CODE
VIDEO (tamilthugal.blogspot.com)
தமிழ்த்துகள்: மயங்கொலிகள் இலக்கணம் வகுப்பு 6 MAYANGOLIKAL
TAMIL ILAKKANAM (tamilthugal.blogspot.com)
11.ஆயத்தப்படுத்துதல்
கலையின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த மயங்கொலிச் சொற்களைக்
கூறச்செய்தல்.
12.அறிமுகம்
மாமல்லபுரத்தின் பெருமையைக் கூறுதல்.
மயங்கொலிகளைக் கூறி, பாடப்பொருளை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
மாமல்லபுரச் சிற்பங்கள் குறித்துக் கூறுதல்.
மயங்கொலிகளை
வாசித்து அவற்றின் பொருள் கூறுதல். மாணவர்களையும் திரும்பக் கூறச்செய்தல்.
சிற்பங்கள்
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். மயங்கொலிகளை உதாரணங்களுடன் விளக்குதல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடல் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
சிற்பக்கலையின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். மயங்கொலிச் சொற்களை அறியச்
செய்தல்.
15.மதிப்பீடு
LOT – கடலுக்கு வேறு பெயர் ..............................
மாமல்லபுரம்
எப்படி உருவானது?
MOT
– மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள் யாவை?
ண, ன, ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.
HOT
– சிற்பக் கலைஞர்களிடம் கேட்க விரும்பும் வினாக்கள் 5 எழுதுக.
நாம்
பயன்படுத்தும் மயங்கொலிச் சொற்கள் 5 எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
மயங்கொலி எழுத்துகளை ஒலித்துப் பழகுக.
மாமல்லபுரம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.