பத்தாம் வகுப்பு அறிவியல் இயற்பியல் தமிழ் வழி ஒரு மதிப்பெண் வினாக்கள்
விருதுநகர் மாவட்டம்
10th science physics tamil medium one mark questions choose the correct answer virudhunagar district
1. கீழ்க்கண்டவற்றில் நிலைமம் எதனைச் சார்ந்தது
பொருளின் எடை
கோளின் ஈர்ப்பு முடுக்கம்
பொருளின் நிறை
அ மற்றும் ஆ
2. கீழ்க்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது
ஓய்வு நிலையில் உள்ள பொருளில்
இயக்க நிலையில் உள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சமநிலையுள்ள பொருள்களில் மட்டும்
3. ஒரு கிராம் எடை என்பது ---- க்கு சமமாகும்
9.8 டைன்
98 டைன்
980 டைன்
இவற்றுள் எதுவுமில்லை
4. ராக்கெட் ஏவுவதில் ______ விதிகள் பயன்படுத்தப்படுகிறது
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது இயற்பியல் விதி
நேர்க்கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
அ மற்றும் இ
5. பொருளின் அளவிற்கு சமமான தலைகீழான மெய்ப் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
f
ஈறிலாத் தொலைவு
2f
f க்கும் 2f க்கும் இடையில்
6. மின்விளக்கு ஒன்று குவி லென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்விளக்கு ஒளி ஊட்டப்படும் போது, குவி லென்சானது
விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இணைக் கற்றைகளை உருவாக்கும்
நிறக் அகற்றைகளை உருவாக்கும்
7. ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு
4மீ
-40மீ
-0.25மீ
-2.5மீ
8. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டை சரி செய்ய உதவுவது
குவி லென்சு
குழி லென்சு
குவி ஆடி
இரு குவிய லென்சு
9. பொது வாயு மாறிலியின் மதிப்பு
3.81 J / மோல் K
8.31 J / மோல் K
1.31 J / மோல் K
8.03 J / மோல் K
10. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர் வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
நேர்க்குறி
எதிர்க் குறி
சுழி
இவற்றில் எதுவும் இல்லை
11. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அல்லது குளிர்விக்கும் போது ஏற்படும் நீள் வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்
X அல்லது -X
Y அல்லது -Y
அ மற்றும் ஆ
அ அல்லது ஆ
12. மூலக்கூறுகளின் சராசரி _______ வெப்பநிலை ஆகும்
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கு இடையே உள்ள வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் நிலைய ஆற்றலின் கூடுதல்
மொத்த ஆற்றல் மற்றும் நிலைய ஆற்றலுக்கு இடையேயான வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றல் இடையேயான உள்ள வேறுபாடு
13. மின்தடையின் SI அலகு
மோ
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
14. கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு
மின்தடை எண்
மின் ஆற்றல்
மின் கடத்து திறன்
மின் திறன்
15. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330மீ/வி. வெப்பநிலை மாறிலியாக இருக்கும்போது, அதன் அழுத்தம் நான்கு மடங்கு உயரப்பட்டால் ஒலியின் திசைவேகம்
330மீ/வி
660மீ/வி
156மீ/வி
990மீ/வி
16. மனிதனால் உணரக்கூடிய செவியுணர்வு ஒலியின் அதிர்வெண்
50kHz
20kHz
15000kHz
1000kHz
17. ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒளியின் திசைவேகம் 500மீ/வி எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திறகும் எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன
17 மீ
20 மீ
25 மீ
50 மீ
18. கதிரியக்கத்தின் அலகு
ராண்ட்ஜன்
கியூரி
பெக்கொரல்
இவை அனைத்தும்
19. செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்
பெக்கோரல்
ஐரின் கியூரி
ராண்ட்ஜன்
நீல்ஸ் போர்
20. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு
ரேடியோ அயோடின்
ரேடியோ கார்பன்
ரேடியோ கோபால்ட்
ரேடியோ நிக்கல்
21. காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க _________ உறைகள் பயன்படுகின்றன
காரீய ஆக்சைடு
இரும்பு
காரீயம்
அலுமினியம்
22. ஜேம்ஸ் சாட்விக் இதனைக் கண்டுபிடித்தார்
புரோட்டான்
எலக்ட்ரான்
நியூட்ரான்
பாசிட்ரான்
23. ஒலியின் திசைவேகம் இதில் அதிகமாக இருக்கும்
திரவம்
வாயு
திண்மம்
அனைத்திலும்
24. ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியில் இருந்து முன்னும் பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது--------- ஆகும்
அதிர்வெண்
அதிர்வு
அலை நீளம்
வேகம்
25. ஒரு குதிரை திறன் என்பது
756 வாட்
746 வாட்
736 வாட்
766 வாட்
26. மின் அழுத்த வேறுபாட்டிருக்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் -----
மின்னழுத்தம்
மின்தடை
மின்தடை எண்
மின் கடத்து திறன்
27. மின் தடை எண்ணின் அலகு
ஓம்
ஓம் மீட்டர்
ஆம்பியர்
கூலும்
28. PV = மாறிலி என்பது -----விதி
சார்லஸ்
அவகேட்ரோ
பாயில்
நியூட்டன்
29. கண்ணுறு ஒளியில் குறைந்த அலைநீளம் கொண்ட நிறம்
சிகப்பு
பச்சை
மஞ்சள்
ஊதா
30. CGS முறையில் விசையின் அலகு
நியூட்டன்
கிலோ கிராம்
டைன்
மீட்டர்