விருதுநகர் மாவட்டம் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் தமிழ் வழி ஒரு மதிப்பெண் வினாக்கள்
10th social science civics tamil medium one mark questions choose the correct answer
1. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை
அ) ஹிராகுட் அணை
ஆ) பக்ராநங்கல் அணை
இ) மேட்டூர் அணை
ஈ) நாகர்ஜூனா சாகர் அணை
2. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?
அ) பாலக்காடு
ஆ) செங்கோட்டை
இ) போர்காட்
ஈ) அச்சன்கோவில்
3. கூற்று : தமிழ்நாடு மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையைப் பெறுவதில்லை காரணம் : இது மேற்கு தாடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு. .
ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு
4. உலகிலேயே மிக நீளமான அணை ------------------
அ) மேட்டூர் அணை
ஆ) கோசி அணை
இ) ஹிராகுட் அணை
ஈ) பக்ராநங்கல் அணை
5. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி
பாபர்
தராய்
பாங்கர்
காதர்
6. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் ----கி மீ
2500
2933
3214
2814
7. மேற்கத்திய இடையூறுகளால் மழை பெறும் பகுதி
தமிழ்நாடு
பஞ்சாப்
தமிழ்நாடு
மத்தியபிரதேசம்
8. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்
அ) குஜராத்
ஆ) இராஜஸ்தான்
இ) மகாராஷ்டிரம்
ஈ) தமிழ்நாடு
9. தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ------------ .
அ) மேட்டூர்
ஆ) பாபநாசம்
இ) சாத்தனூர்
ஈ) துங்கபத்ரா
10. எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது
அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
ஆ) இந்திய வானியல் துறை
இ) இந்திய மண் அறிவியல் நிறுவனம்
ஈ) இந்திய மண் ஆய்வு நிறுவனம்
11. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் ------------
அ) சேலம்
ஆ) சென்னை
இ) மதுரை
ஈ) கோயம்புத்தூர்
12. ஒரே அளவுள்ள மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு -------------- ஆகும்.
சமவெப்ப கோடுகள்
ஆ) சம மழைக்கோடுகள்
இ) சம அழுத்தக் கோடுகள்
ஈ) அட்சக் கோடுகள்
13. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது
அயனமண்டல பசுமை மாறாக்காடுகள்
இலையுதிர்க்காடுகள்
மாங்குரோவ் காடுகள்
மலைக்காடுகள்
14. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ----------
அ தமிழ்நாடு
ஆ) ஆந்திரப் பிரதேசம்
இ) மத்தியப் பிரதேசம்
ஈ) கர்நாடகா
15. இந்தியாவின் காலநிலை
அயனமண்டல ஈரக்காலநிலை
நிலநடுக்கோட்டு காலநிலை
அயனமண்டல பருவக்காற்று காலநிலை
மிதஅயனமண்டல காலநிலை
16. புதிய வண்டல படிவுகள்
பாபர்
காதர்
தராய்
பாங்கர்
17. கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம். காரணம் : இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி,
18. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு ------
அ) வரைபடவியல்
ஆ) மக்களியல்
இ) மானுடவியல்
ஈ) கல்வெட்டியல்
19. மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது
அ) சேமிப்பு மின்கலன்கள்
ஆ) எஃகு தயாரிப்பு
இ) செம்பு உருக்குதல்
ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு
20. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
ஊட்டி
ஆணைமுடி
தொட்டபெட்டா
சோலைகாடு
21. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க. 1. ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.
அ) பாலைவனம்
ஆ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) மகாநதி டெல்டா
22. இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது ----------------
அ) பருத்தி
ஆ) கோதுமை
இ) சணல்
ஈ) புகையிலை
23. பீகாரின் துயரம் என அழைக்கப்படும் ஆறு
கோசி
நர்மதை
கோதாவரி
தாமோதர்
24. ------------- மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது
அ) வண்டல்
ஆ) கரிசல்
இ) செம்மண்
ஈ) உவர் மண்
25. தமிழ்நாட்டில் தீர்க்க பரவல் ------------- முதல் ------------------ வரை உள்ளது.
அ) 76°18' கி முதல் 80°20' கி வரை
ஆ) 76°18' மே முதல் 80°20' மே வரை
இ) 10°20' கி முதல் 86°18' கி வரை
ஈ) 10°20' மே முதல் 86°18' மே வரை
26. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது
அ) போக்குவரத்து
ஆ) கனிமப்படிவுகள்
இ) பெரும் தேவை
ஈ) மின்சக்தி சக்தி கிடைப்பது
27. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் -------------
அ) பெங்களூரு
ஆ) சென்னை
இ) புது டெல்லி
ஈ) ஹைதராபாத்
28. கூற்று : இமயமலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது. காரணம் : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
29. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் -----------
அ) பருப்பு வகைகள்
ஆ) சிறுதானியங்கள்
இ) எண்ணெய் வித்துக்கள்
ஈ) நெல்
30. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ------------.
அ) காவிரி டெல்டா
ஆ) மகாநதி டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) கிருஷ்ணா டெல்டா