கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, January 04, 2023

10th social science history Tamil and English medium one mark questions பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு தமிழ், ஆங்கில வழி ஒரு மதிப்பெண் வினாக்கள்

விருதுநகர் மாவட்டம் வகுப்பு-10 பாடம் - சமூக அறிவியல் வரலாறு ஒரு மதிப்பெண் வினாக்கள் தமிழ் வழி, ஆங்கில வழி

10th social science history one mark questions tamil medium and English medium choose the correct answer virudhunagar district 

1. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை? Which part of the world disliked dollar imperialism?

a) ஐரோப்பா. Europe.

b) லத்தின் அமெரிக்கா. Latin America.

c) இந்தியா. India.

d) சீனா. China.

2. 1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்? Which one of the following was launched by Haji Shariatullah in 1818 in East Bengal.

a) வஹாபி கிளர்ச்சி. Wahhabi Rebellion.

b) ஃபராசி இயக்கம். Farazi Movement.

c) பழங்குடியினர் எழுச்சி. Tribal uprising.

d) கோல் கிளர்ச்சி. Kol Revolt.

3. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது? Which country emerged as the strongest in East Asia towards the close of nineteenth century?

a) சீனா. china.

b) ஜப்பான். Japan.

c) கொரியா. Korea.

d) மங்கோலியா. Mongolia.

4. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்? Who issued the Tiruchirapalli proclamation of Independence?

a) மருது சகோதரர்கள். Marudhu brothers.

b) பூலித்தேவர். Puli Thevar.

c) வீரபாண்டிய கட்டபொம்மன்.Veerapandiya Kattabomman.

d) கோபால நாயக்கர். Gopala Nayak.

5. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்? Who was the founder of Widow Remarriage Association?

a) M.G. ரானடே. M.G. Ranade.

b) தேவேந்திர நாத் தாகூர். Devendranath Tagore.

c) ஜோதிபா பூலே. Jyotiba Phule.

d) அய்யன்காளி. Ayyankali.

6. பன்னாட்டு சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்? Who initiated the formation of League of Nations?

a) ரூஸ்வெல்ட். Roosevelt.

b) சேம்பெர்லின். Chamberlain.

c) உட்ரோ வில்சன். Woodrow Wilson.

d) பால்டுவின். Baldwin.

7. 1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ............. நிறுவினார். .............. founded Adi Dravida Mahajana sabha in 1893.

a) இரட்டை மலை சீனிவாசன்.

b) B. R. அம்பேத்கர்.

c) இராஜாஜி.

d) எம்,சி. ராஜா.

8. கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்? Who was the first Palayakkarars to resist the East India company's policy of territorial aggrandizement?

a) மருது சகோதரர்கள். Marudhu brothers.

b) பூலித்தேவர். Puli Thevar.

c) வேலுநாச்சியார். Velunachiyar.

d) வீரபாண்டிய கட்டபொம்மன்.Veerapandiya Kattabomman.

9. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனக் கூறியவர் யார்? Who said "imperialism is the highest stage of capitalism"?

a) லெனின். Lenin.

b) மார்க்ஸ். Marx.

c) சன் யாட் சென். Sun yat-sen.

d)மாசேதுங். Mao Tsetung.

10. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது? Which Act introduced Provincial Autonomy?

a) 1858 ஆம் ஆண்டு சட்டம். 1858 Act.

b) இந்திய கவுன்சில் சட்டம்,1909. Indian councils Act, 1909.

c) இந்திய அரசு சட்டம் 1919, Government of India 1919.

d) இந்திய அரசு சட்டம்,1935. Government of India Act, 1935.

11. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்? Who among the following were Swarajists?

a) S. சத்தியமூர்த்தி. S.Satyamurti.

b) கஸ்தூரிரங்கர். Kasturirangar.

c) P. சுப்பராயன். P. Subbarayan.

d) பெரியார் ஈவெரா Periyar EVR.

12. "அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" எனக் கூறியவர்? Who said"Better bullock carts and freedom than a train de luxe with subjection"?

a) அன்னி பெசன்ட். Annie Besant.

b) M. வீரராகவாச்சாரீ. M. Veeraraghavachari.

c) B.P. வாடியா‌. B. P.Wadia.

G.S.அருண்டேல் G.S.Arundale.

13. அரசு அதிகாரிகளைத்தேர்வு செய்ய.......... நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது. .............. was established by the justice party Government for the selection of Government officials.

a) பணியாளர் தேர்வு வாரியம். Staff Selection Commission.

b) பொதுப் பணி ஆணையம். Public Service Commission.

c) மாநில பணியாளர் ஆளெடுப்பு வாரியம்.Provincial Staff Recruirement Board.

d) பணியாளர் தேர்வாணையம். Staff Selection Commission.

14. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்? Find out the militant nationalist from the following.

a) தாதாபாய் நௌரோஜி. Dadabhai naoroji.

b) நீதிபதி கோவிந்த் ரானட. Justice Govind Ranade.

c) பிபின் சந்திர பால்‌. Bipin chandra pal.

d) ரொமேஷ் சந்திர. Romesh Chandra.

15. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது? When was the Charter of the UN signed?

a) ஜூன் 26,1942. June 26, 1942.

b) ஜூன் 26,1945. June 26, 1945.

ஜனவரி 1, 1942. January 1, 1942.

ஜனவரி 1,1945. January 1, 1945.

16. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது? When was the Warsaw pact dissolved?

a) 1979.

b) 1989.

c) 1990.

d) 1991.

17. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ........... ஆகும். The United States and European allies formed ........... to resist any Soviet aggression in Europe.

a) சீட்டோ. SEATO.

b) நேட்டோ. NATO.

c) சென்டோ. SENTO.

d) வார்சா ஒப்பந்தம். Warsaw Pact.

18. அமெரிக்க தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது? Where did the US drop its first atomic bomb?

a) கவாசாகி. Kavashaki.

b) இன்னோசிமா. Innoshima.

c) ஹிரோஷிமா‌. Hiroshima.

d) நாகசாகி. Nagasaki.

19. நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை ............ என் அழைக்கப்பட்டது. The Secret state police in Nazi Germany was known as.......... .

a) ஸ்வஸ்திக். Swastika.

b) மெயின் காம்ப். mein kampf.

c) கெஸ்டபோ. Gestapo.

d) டியூக். Duce.

20. சத்யார்த்தபிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் யார்? Who was the author of the book Satyathaprakash?

a) தயானந்த சரஸ்வதி. Dayananda Saraswathi.

b) அயோத்தி தாசர். Iyothee Thassar.

c) அன்னி பெசன்ட். Annie Besant.

d) சுவாமி சாரதாநந்தா. Swami shradanatha.

21. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்? who was arrested during the anti Rowlatt protests in Amritsar.?

a) மோதிலால் நேரு. Motilal Nehru.

b) சைஃபுதீன் கிச்லு. Saifuddin Kitchlew.

c) முகம்மது அலி. Mohamed Ali.

d) ராஜ் குமார் சுக்லா. Raj Kumar Shukla.

22. .1709 இல் தரங்கம்பாடியில்........... ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார். ................ established a full fledged printing press in 1709,at Tranquebar.

a) கால்டுவெல். Caldwell.

b) F.W.எல்லிஸ். F.W. Ellis.

c) சீகன்பால்கு. Ziegenbalg.

d) மீனாட்சி சுந்தரம். Meenakshisundaram.

23. இத்தாலி யாருடன் லேட்டரல் உடன்படிக்கையைச் செய்து கொண்டது? With whom of the following was the Lateran Treaty signed by Italy?

a) ஜெர்மனி. Germany.

b) ரஷ்யா. Russia.

c) போப். Pope.

d) ஸ்பெயின். Spain.

24. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது? On 8 January 1933 which day was observed ..............

a) கோவில் நுழைவு நாள். Temple Entry Day.

b) மீட்பு நாள் Day of deliverance.

c) நேரடி நடவடிக்கை நாள். Direct Action Day.

d) சுதந்திரப் பெருநாள். Independence Day.

25. 1.துருக்கிய பேரரசு பால்களில் துருக்கியர் அல்லாத பல இன மக்களை கொண்டிருந்தது. 
2.துருக்கி மைய நாடுகள் பக்கம் நின்று போரிட்டது. 
3.பிரிட்டன் துருக்கியை தாக்கி கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றியது. 
4.சூயஸ் கால்வாயை தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. 
1.The Turkish Empire contained many non-Turkish people in the Balkans.
 2.Turkey fought on the side of the central powers.
 3.Britain attacked Turkey and captured Constantinople.
 4.Turkeys attempt to attack Suez canal but were repulsed.

a) 1,2 ஆகியன சரி‌. 1 and 2 are correct.

b) 1,3 ஆகியன சரி. 1 and 3 are correct.

c) 4 சரி. 4 is correct.

d) 1,2 மற்றும் 4 சரி. 1,2 and 4 are correct.

26. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? Who was the first President of the Madras Mahajana Sabha?

a)T.M. நாயர். T.M. Nair.

b) P. ரங்கையா P. Rangaiah.

c) G. சுப்பிரமணியம். G. Subramaniam.

d) G.A. நடேசன். G.A.Natesan.

27. யாருடைய பணியும் இயக்கமும், 1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது? Whose campaign and work led to the enactment of widow Remarriage Reform Act of 1856?

a) ஈஸ்வர சந்திர வித்யாசாகர். Iswar Chandra Vidyasagar.

b) ராஜா ராம்மோகன் ராய். Raja Rammohan Roy.

c) அன்னி பெசன்ட். Annie Besant.

d) ஜோதிபா பூலே. Jyotiba Phule.

28. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது. When did the partition of Bengal come into effect?

a) 1905 ஜூன் 19. 19, June 1905.

b) 1906 ஜூலை 18. 18, July 1906.

c) 1907 ஆகஸ்ட் 19. 19, August 1907

d) 1905 அக்டோபர் 16. 16 October 1905

29. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்? Where were the sons of Tipu Sultan send after the Vellore Revolt?

a) கல்கத்தா. Calcutta.

b) மும்பை‌. Mumbai.

c) டெல்லி. Delhi.

d) மைசூர். Mysore.

30. எந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் பொதுவுடமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்? Which American president followed the policy of containment of communism?

a) உட்ரோ வில்சன். Woodrow Wilson.

b) ட்ருமென்‌. Truman.

c) தியோடர் ரூஸ்வெல்ட். Theodore Roosevelt.

d) பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்.Franklin Roosevelt.

தமிழ்த்துகள்

Blog Archive