கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, January 05, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1,2,3 ஒரு மதிப்பெண் வினாக்கள் விருதுநகர் மாவட்டம் 10th tamil one mark questions choose the correct answer virudhunagar district unit 1, 2, 3


பத்தாம் வகுப்பு 
தமிழ் 
இயல் 1,2,3 
ஒரு மதிப்பெண் வினாக்கள் 
விருதுநகர் மாவட்டம்

10th tamil 
one mark questions 
choose the correct answer 
virudhunagar district 
unit 1, 2, 3

1. சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்னும் அடியில் பாக்கம் என்பது -

புத்தூர்

மூதூர்

பேரூர்

சிற்றூர்

2. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் - பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?

உருவகம், எதுகை

மோனை, எதுகை

முரண், இயைபு

உவமை, எதுகை

3. செய்தி 1 - கேலிச் சித்திரத்தை உருவாக்கியவர் பாரதியார். செய்தி 2 - பாரதியார் எழுதிய நூல் புதிய ஆத்திசூடி.

செய்தி 1 சரி செய்தி 2 தவறு

செய்தி 1 தவறு செய்தி 2 சரி

இரண்டும் சரி

இரண்டும் தவறு

4. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

1,2,3,4

3,1,4,2

4,3,2,1

3,4,1,2

5. குற்றம் கண்ட பொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக் கொள்ளாதவன் ..... மன்னன்

பாதுகாப்பற்ற

குற்றமற்ற

சிறந்த

நல்ல

6. மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது....

வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

7. பெரிய மீசை சிரித்தார் - பெரிய மீசைக்கான தொகையின் வகை எது?

பண்புத்தொகை

உவமைத்தொகை

அன்மொழித்தொகை

உம்மைத்தொகை

8. கலைச்சொல் தருக discussion

உரையாடல்

கலந்துரையாடல்

பேச்சு

மொழி

9. நன்மொழி என்பதன் இலக்கணக்குறிப்பு -

வினைத்தொகை

உவமைத்தொகை

பண்புத்தொகை

வேற்றுமைத்தொகை

10. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை .....

குலை வகை

மணி வகை

கொழுந்து வகை

இலை வகை

11. பொருந்தாததைத் தேர்வு செய்க.

கனிச்சாறு

உலகியல் 100

பள்ளிப் பறவைகள்

திருக்கருவை அந்தாதி

12. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் என்று பாடியவர் .....

ஔவையார்

திருவள்ளுவர்

கம்பர்

இளங்கோவடிகள்

13. செய்தி 1 - ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம். செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே. செய்தி 3 - காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

செய்தி 1 மட்டும் சரி

செய்தி 1, 2 ஆகியன சரி

செய்தி 3 மட்டும் சரி

செய்தி 1, 3 ஆகியன சரி

14. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை -

நிலத்திற்கேற்ற விருந்து

இன்மையிலும் விருந்து

அல்லிலும் விருந்து

உற்றாரின் விருந்து

15. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் ....., ....... பாடல்களைத் தாய் மொழியில் எழுதி வைத்துப் பாடுகின்றனர்.

திருக்குறள், திருப்பாவை

திருவெம்பாவை, திருக்குறள்

திருவெம்பாவை, திருப்பாவை

திருக்குறள், திருமந்திரம்

16. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பிடுவது ......

இலையும் சருகும்

தோகையும் சண்டும்

தாளும் ஓலையும்

சருகும் சண்டும்

17. சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படுபவர்.....

சண்முகசுந்தரம்

சண்முகநாதன்

சண்முக வேலன்

சண்முகம்

18. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது -

வேற்றுமை உருபு

எழுவாய்

உவம உருபு

உரிச்சொல்

19. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் .....

எந்+தமிழ்+நா

எந்த+தமிழ்+நா

எம்+தமிழ்+நா

எந்தம்+தமிழ்+நா

20. கலைச்சொல் தருக storm

சூறாவளி

புயல்

பெருங்காற்று

சுழல் காற்று

21. பின்வருவனவற்றுள் முறையான தொடர் -

தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

22. மலைபடுகடாம் ..... என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.

நன்னன்

கூத்தன்

அதிவீரராமன்

கபிலன்

23. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

6

8

9

12

24. பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

கடல் நீர் ஒலித்தல்

கடல் நீர் கொந்தளித்தல்

25. காசிக்காண்டம் என்பது -

காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

26. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே .....

பாடிய, கேட்டவர்

பாடல், பாடிய

கேட்டவர், பாடிய

பாடல், கேட்டவர்

27. சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து.....

கொழுந்து

குருத்து

கொழுந்தாடை

தளிர்

28. முல்லைப்பாட்டு ..... அடிகளைக் கொண்டது.

107

104

103

109

29. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

2

3

4

5

30. சிறப்புப் பெயர் முன்னும் பொதுப் பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வருவது.....

பண்புத்தொகை

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

அன்மொழித்தொகை

தமிழ்த்துகள்

Blog Archive