கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, December 17, 2023

ஆறாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு தொகுத்தறித் தேர்வு 2023 பருவம் 2 விருதுநகர்

PDF Link கீழே 👇

6th Tamil Second Term SA Half yearly Exam Answer Key

விருதுநகர் மாவட்டப் பொதுத் தேர்வுகள்

தொகுத்தறித் தேர்வு 2023 பருவம் 2

ஆறாம் வகுப்பு                    தமிழ்                                       விடைக்குறிப்பு

பகுதி 1

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                         10X1=10

1. ஆ.சிறப்புடையார்

2. இ.கல்வி

3. அ.பொங்கலன்று

4. இ.பயன்தராத

5. சீருடைத்திட்டத்தை

6. நுகர்வோர்

7. பஞ்சுமெத்தை

8. ஊஞ்சல்

9. கப்பல்

10. கடல்

 

பகுதி 2

5 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              5X2=10

 

11. தன்மானம் இல்லாத கோழைகளுடன்

 

12. ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

, , உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.

 

13.     அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போது

    தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.

 

14.     பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள்.

 

15.     சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும்       இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு.

இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

 

16. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்வதற்காகப் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 

17. மீனவர்கள் தமது வீடாகக் கட்டுமரத்தையும், செல்வமாக மீன்களையும் கருதுகிறார்கள்.

 

3 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              3X4=12

 

18. பழந்தமிழர் ஏற்றுமதி செய்த பொருள்கள்

தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு.

பழந்தமிழர் இறக்குமதி செய்த பொருள்கள்

கண்ணாடி, கற்பூரம், பட்டு, குதிரைகள்.

 

19. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

20. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

21. 1.   பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்.

2.       பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்.

3.       இனிய சொற்களைப் பேசுதல்.

4.       எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்.

5.       கல்வி அறிவு பெறுதல்.

6.       எல்லோரையும் சமமாகப் பேணுதல்.

7.       அறிவுடையவராய் இருத்தல்.

8.       நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்.

 

22. காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.

அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.

மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.

மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தார்.

பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

 

23. தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான்.

தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான்.

ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான்.

முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்தினான்.

 

பகுதி 4

அடிபிறழாமல் எழுது

24. மூதுரை                                                                                         4

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

-        ஔவையார்.

 

25. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்                                         2

உள்ளத்து அனையது உயர்வு

 

பகுதி 4

 

5 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              5X2=10

 

26. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

27.அ. விளையும் பயிர் முளையிலே தெரியும்

ஆ. கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.

 

28.அ. என், மணம்.

ஆ. திருவிழா, சென்றனர்.

 

29.அ. தலை

ஆ. காளை

 

30.அ.வணிகர்

ஆ.மின்படிக்கட்டு

 

31. அ. நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்.

ஆ. நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.

 

32. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா

ஊக்கம் உடையான் உழை.

 

பகுதி 5

ஏதேனும் 1                                 1X6=6

33, மாமல்லபுரச் சிற்பங்கள்

34. அண்ணா நூற்றாண்டு நூலகம்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

பகுதி 6

ஏதேனும் 1                                 1X6=6

35, பிறந்த நாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம்

36. பொங்கல் திருநாள்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்


PDF LINK

 

தமிழ்த்துகள்

Blog Archive