*வாழ்த்துக் கவிதை*
நாள் புதிது
ஞாயிறு புதிது..
திங்களும்
புத்தம் புதிது
திக்கெட்டும் தித்திக்கின்ற
திகட்டாத
மகிழ்வும் புதிது...
புதிதாகப் பிறப்போம்
நாமும்
புத்தாண்டு
நன்னாள் இதிலே!
இன்பங்கள் யாவும் இங்கு
விண் தூவும்
மழையாய் விழட்டும்...
உற்சாகம் ஊக்கம் எல்லாம்
உதயசூர்ய
ஒளியாய் எழட்டும்...
உடல் நலமும்
உள்ள நலமும்
உலகையே
வளமாக்கட்டும்..
ஒவ்வொருவர்
வாழ்விலும் நாளும்
வசந்தமே
வசமாகட்டும்...
என் அருமைத்
தோழர் தோழியர்
உங்களுக்கு
வாழ்த்துகள் கூறும்
என் சிறு
கவிதை உங்கள்
இதயத்தை
வந்து சேரும்
பிறந்திருக்கும்
புதிய ஆண்டில்
நிறைந்திடட்டும்
இன்பம் இன்பம்!!!
நிறைந்திருக்கும்
இன்பம் என்றும்
நிலைத்திடட்டும்
இன்றுபோல் என்றும் 🙏
வாழ்த்துகளுடன்
சேவியர் ஆசிரியர்
ஆலங்குடி