7th Tamil Model Notes Of Lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
20-01-2025 - 24-01-2025
2.பருவம்
3
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
நயத்தகு நாகரிகம் –
விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
திருநெல்வேலிச்
சீமையும் கவிகளும்
6.பக்கஎண்
12 - 15
7.கற்றல் விளைவுகள்
T-705 தாங்கள் வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாடல்கள் பற்றிக் கலந்துரையாடி அவற்றின் நயம்
பாராட்டுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
திருநெல்வேலி
மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் அறிந்து கொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
திருநெல்வேலிப்
பகுதியைச் சேர்ந்த புலவர்கள் குறித்து அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_71.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1_8.html
https://tamilthugal.blogspot.com/2020/06/thirunelve.html
https://tamilthugal.blogspot.com/2021/05/thirunelveli-seemaiyum-kavikalum-tamil.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த
புலவர்களைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த
திருநெல்வேலி நகரம் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
திருநெல்வேலிப்
புலவர்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பாரதியார், கவிமணி,
கடிகை முத்துப்புலவர், பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடுதல். சீதக்காதி, அருணகிரிநாதர், அண்ணாமலையார் குறித்து விளக்குதல்.
கவிஞர்களின் தகவல்கள் அறிதல்.
மாணிக்கவாசகர்,
திரிகூடராசப்பக்கவிராயர் குறித்துப் பேசுதல். கட்டுரை குறித்து மாணவர்கள் அறிந்த
செய்திகளைக் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
திருநெல்வேலிச்சீமை, அக்கால நடை, கவிதைகள் குறித்து
விளக்குதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – பாரதியார் பிறந்த ஊர் ...............................
ந.சி.வி – டி.கே.சி. குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய
செய்திகளைத் தொகுத்து எழுதுக.
உ.சி.வி – நீங்கள் விரும்பும் கவிஞர் குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உங்கள் மாவட்டத்திலுள்ள கவிஞர்களின் பெயர்களை எழுதுக.
பாரதியார் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.