8th Tamil Model Notes Of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
20-01-2025 - 24-01-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
அறத்தால் வருவதே
இன்பம் –விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
மனித யந்திரம்.
6.பக்கஎண்
177 - 181
7.கற்றல் விளைவுகள்
T-814 படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை
மனத்தில்கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்..
8.கற்றல் நோக்கங்கள்
நவீனச் சிறுகதைகளைப்
படித்து அவற்றின் நுட்பங்களை அறியும் திறன்பெறுதல்.
9.நுண்திறன்கள்
வறுமையிலும்
செம்மை - என்னும் தலைப்பில் கதை எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_38.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_87.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-virivanam-manitha-yanthiram.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-pdf-8th-tamil-virivanam-manitha.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
கதையைக் கூறச்செய்தல்.
புதுமைப்பித்தன்
குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
புதுமைப்பித்தனை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
மனித யந்திரம் கதை
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். புதுமைப்பித்தன் குறித்து விளக்குதல்.
மீனாட்சிசுந்தரம் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல். மாணவர்களின் நேர்மையான
சூழல்களைக் கூறச் செய்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
நேர்மையான தலைவர்களின் வாழ்வியல் சூழல், தற்போதைய பெருமை,
புகழ் குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – புதுமைப்பித்தனின்
இயற்பெயர் ..............................
ந.சி.வி – மனித
யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.
உ.சி.வி – வறுமையிலும் நேர்மையாக இருந்த ஒருவர் பற்றி எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
புதுமைப்பித்தனின் கதைகளைப் பட்டியலிடுக.