கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 07, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சனவரி 20

 நாள் - 20-01-2025 - 24-01-2025

வகுப்பு - 10

பாடம் - தமிழ்

தலைப்பு - திருப்புதல்

முதல் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள்

1.  சான்றோர் வளர்த்த தமிழ் - கட்டுரை எழுதுக.

  ’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’ இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.                தமிழ்த்துகள்

2.    உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான்,  இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது.                     தமிழ்த்துகள்

இவ்வாறு நீர் தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

3.    முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?

4.    புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.                          தமிழ்த்துகள்

திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது. இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

5.    இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.               தமிழ்த்துகள்

1.     மனிதர்களின் மூளையைப் போன்றதுசெயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது.                            தமிழ்த்துகள்

இதனால் மனித குலத்திற்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு 'எதிர்காலத் தொழில்நுட்பம்‘ என்ற தலைப்பில் எழுதுக.

2.    ஐநா அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது. ஆனால், ஒருவர் பேசும் போதே மொழிபெயர்ப்பது 'விளக்குவது' என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார்.                          தமிழ்த்துகள்

இப்பகுதியில் இருந்து 5 வினாக்களை உருவாக்குக.

தமிழ்த்துகள்

Blog Archive