வாழ்த்துக் கவிதை
நாடு என்ன செய்ததென்று கேள்வி கேட்கிறாய்
நாளும் என்ன கிடைக்குமென்று
நீயும் பார்க்கிறாய்
நாட்டில் எதுவும் நடக்கலைன்னு
குறைகள் சொல்கிறாய்
நாலாபுறமும்
வீணாய்ப் பேசியே நாட்டைக் கொல்கிறாய்
நாட்டுக்கு நீதான் என்னதான் செய்தாய்
உன்னைக் கேட்டதுண்டா?
வீட்டுக்குள் உன்னைப் பூட்டிக் கொண்டாய்
நாட்டிற்காய் வாழ்ந்ததுண்டா?
அன்னை பாரதம்
காக்கும் ஓர்குணம் ஆள்பவர்க்கு மட்டுமன்று
உன்னை நீயும்
ஒரு காவலனாய் உணர்ந்தால்தான் நன்று..
மூவண்ணக் கொடியும் இத்திருநாளும்
முன்னோர் தியாகம் சொல்லும்
மேவிய புகழுடன்
பாரதம் பாரில் நம்மால்தானே வெல்லும்?
உரிமைகள் உணர்வோம்
கடமைகள் செய்வோம்
குடியரசின் புகழ் காப்போம்..
நாட்டுக்கான
நம் பணி செய்து நாட்டுக்கே
நலம் சேர்ப்போம்
குடியரசு தின நல்வாழ்த்துகள்...
சேவியர் ஆசிரியர்
ஆலங்குடி