6th Tamil Model Notes Of Lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
05-02-2024 முதல்
09-02-2024
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
எல்லாரும் இன்புற –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
பசிப்பிணி போக்கிய
பாவை
6.பக்கஎண்
24 - 27
7.கற்றல் விளைவுகள்
T-609 மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து, குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல், ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்.
8. கற்றல் நோக்கங்கள்
பிறர் பசியைப்
போக்கும் உயர் சிந்தனையை வளர்த்தல் திறன்.
பெற்றோரையும்
பெரியோர்களையும் மதிக்கும் பண்பு பெறுதல் திறன்.
9.நுண்திறன்கள்
அறஇலக்கியங்கள்
கூறும் கருத்துகள் குறித்து அறிதல்.
பசிப்பிணி
போக்கும் பண்பை அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_45.html
https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video.html
https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video_19.html
https://tamilthugal.blogspot.com/2021/02/pasippini-pokkiya-pavai-kuruvina-6th.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_27.html
https://tamilthugal.blogspot.com/2020/06/manimegalai.html
https://tamilthugal.blogspot.com/2022/05/chithalai-chathanar.html
11.ஆயத்தப்படுத்துதல்
பசியின் கொடுமை,
பஞ்சம் பற்றிக் கூறச்செய்தல்.
மணிமேகலை குறித்து
அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
மணிமேகலை, துறவு
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
அமுதசுரபி
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். மணிமேகலை குறித்து விளக்குதல். ஆதிரை
பற்றிக் கூறுதல்.
பசி குறித்து மாணவர்கள்
அறிந்த செய்திகளைக் கூறுதல். தீவதிலகை குறித்து விளக்குதல். வாழ்வைச்
செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல். உணவின் இன்றியமையாமை குறித்து
விளக்குதல். சிறைச்சாலை அறச்சாலையாக மாற நாம் செய்ய வேண்டியவை குறித்து
கலந்துரையாடல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
ஐம்பெருங்காப்பியங்கள் குறித்து விளக்குதல். பல்வேறு
அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
LOT – அமுதசுரபியில் உணவு இட்ட
பெண்..............................
MOT
– அமுதசுரபியின் சிறப்பை விளக்குக.
HOT – பசியால் வாடுபவர்களுக்கு உதவுதல் பற்றி எழுதுக.
அறச்செயல்களாக நாம் செய்ய
வேண்டியவற்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பிறர் பசி போக்க நீ செய்த செயல்களைக் கூறு.
பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தைக் கதை வடிவில் எழுதுக.