தமிழே என்றும் நமக்கு அக்கார
அடிசில்என்பேன்
எக்காலும்வாழும் முப்பாலோடு
ஏறுடை உழவன் தந்த
செந்நெல்அரிசியும் சேர்த்து
செந்தமிழ்ப் பொங்கல்
நம் தமிழன் தந்தான்
இருளைக்கிழித்து எழுந்த தமிழாய் தென்னகம் வெளுக்கும் திசையாய் தைமகள் வந்தாள்
ஒளியே நமது வழியாக
உயர்வே நமது வாழ்வாக
எண்ணிய எண்ணம் செயலாக
ஏற்றம் பிறக்கட்டும்
இனி எல்லாம் சுகமாக
தைமகள் உனக்கு
தமிழால் மாலை சூட்டுகிறேன்...
தரணி வாழ் தமிழர்க்கெல்லாம்
தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்..💐💐
வாழ்த்துகளுடன்
கவிஞர் சுரேஷ் இராமலிங்கம்
காரியாபட்டி.