கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 21, 2024

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு விரிவாகும் ஆளுமை

9th Tamil Model Notes Of Lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

29-01-2024 முதல் 02-02-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

9

4.பாடத்தலைப்பு

அன்பென்னும் அறனே – உரைநடை உலகம்.

5.உட்பாடத்தலைப்பு

விரிவாகும் ஆளுமை

6.பக்கஎண்

232 - 236

7.கற்றல் விளைவுகள்

T-9044 சான்றோர்களின் அறிஞர்களின் தமிழ்ப்பணிகளைப் படித்துணர்ந்து தம்மால் இயன்ற பங்களிப்பினைச் செய்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

தனிநாயகம்  அறிஞரின் தமிழியல், அவரது வாழ்வு இவற்றைப் படித்துப் பரவலாக்குதல்.

9.நுண்திறன்கள்

தமிழ் பயிர் வளர  தம்மால் இயன்ற பங்களிப்பை நல்குதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_19.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-9th-big-question-answer-virivakum.html

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_21.html

11.ஆயத்தப்படுத்துதல்

ஆளுமை குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தனிநாயகம் அடிகளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆளுமை பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          மூன்று இலக்கணங்கள் குறித்து விளக்குதல்.

பிறர் நலவியல் குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக ஒற்றுமை உணர்ச்சி குறித்து உரைத்தல்.

நன்மை நன்மைக்காகவே, இமயவரம்பு, சான்றோர், ஒன்றே உலகம் குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          உலகத்தமிழ் மாநாடுகள் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          LOT – மூன்று இலக்கணங்களைக் குறிப்பிடுபவர் ................................

          MOT – தமிழ்ச்சான்றோர்க்கும் உரோமையச் சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு யாது?

HOT – சான்றாண்மைக் கருத்துகளை எடுத்துரைக்க.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          உங்களுக்குப் பிடித்த தமிழ் ஆளுமைகளின் பெயர்களை எழுதுக.

          தமிழ் மாநாடுகள் குறித்து எழுதுக. 

தமிழ்த்துகள்

Blog Archive