கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, January 17, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சனவரி 22

  நாள் - 22-01-2024 - 24-01-2024

 வகுப்பு - 10

பாடம் - தமிழ்

தலைப்பு - திருப்புதல்

இரண்டாம் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள்

1.‘வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.            தமிழ்த்துகள்

2. ‘மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!’ - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.                              தமிழ்த்துகள்

4. ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

   வடுக்காண் வற்றாகும் கீழ்’ - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

6.       ‘நமக்கு உயிர் காற்று

காற்றுக்கு வரம் மரம் -மரங்களை

வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’ –

இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.

7. வசன கவிதை - குறிப்பு வரைக.

8. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக;

தொடரில் அமைக்க.

9. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

10. மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

11.விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

·12. ‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி, விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.            தமிழ்த்துகள்

13. ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக  ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடரானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

14. ‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ - இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

15.பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

தமிழ்த்துகள்

Blog Archive