7th Tamil Model Notes Of Lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
22-01-2024 முதல் 24-01-2024
2.பருவம்
3
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
நயத்தகு நாகரிகம் –
கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
அணி இலக்கணம்
6.பக்கஎண்
16 - 17
7.கற்றல் விளைவுகள்
T-720 பல்வேறு பாடப்பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக
எழுதும்பொழுது, பொருத்தமான சொற்கள், தொடரமைவுகள், சொற்றொடர், மரபுத்தொடர், சொற்றொடர், மரபுத்தொடர், நிறுத்தக்குறிகள் மற்றும் இலக்கணக் கூறுகளைப்
பொருத்தமாகப் பயன்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
அணியால் சுவை
பெறும் பாடல்களைப் படித்துச் சுவைத்து அறிந்து கொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
உவமையணிக்கும்
எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாட்டை எழுதுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/1.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1_18.html
https://tamilthugal.blogspot.com/2020/04/eduthukattu-uvamai-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/ilporul-uvamai-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/uvamai-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2022/01/3-1-7th-ani-ilakkanam-seventh-tamil-q.html
https://tamilthugal.blogspot.com/2020/08/7-3-1-7th-tamil-term-3-unit-1-ani.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த
பாடல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
உவமை பற்றிக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
உவமை, உவமேயம்,
உவம உருபு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். உவமை அணி, எடுத்துக்காட்டு உவமை
அணி, இல்பொருள் உவமை அணி குறித்து விளக்குதல்.
உவமை குறித்து மாணவர்கள்
அறிந்த செய்திகளைக் கூறுதல். உதாரணங்களுடன் அணியை விளக்குதல். மாணவர்களை அணிக்கு
உதாரணங்களை உருவாக்கச் செய்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அழகான நயங்கள் குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT – உவம உருபுக்கு உதாரணம் ...............................
MOT
– உவமையை விளக்குக.
HOT – நீங்கள் விரும்பும் அணி குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீ அறிந்த உவமைகளை எழுதுக.
அணி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.