கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 28, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 5

 நாள் - 05-02-2024 - 09-02-2024

 வகுப்பு - 10

பாடம் - தமிழ்

தலைப்பு - திருப்புதல்

இரண்டாம் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள்

* அன்னை மொழியே - மனப்பாடப்பாடலை எழுதுக.
*தரமற்ற உணவு குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலருக்குப் புகார் கடிதம் எழுதுக.
*சான்றோர் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
*வசன கவிதை - குறிப்பு வரைக.
*தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை?
*பூவின் நிலைகளை விளக்குக.
*கோபல்லபுரத்து மக்கள் கதையில் வரும் அன்னமய்யா கதாப்பாத்திரத்தைக் குறித்து எழுதுக.
*வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
*எப்பொருள் எனத் தொடங்கும் குறளை எழுதுக.
*தரும் என முடியும் குறளை எழுதுக ।
*உவமையணியை விளக்குக.
*கலைச்சொல் தருக.
Storm
Whirlwind
Vowel
Discussion
Conversation
*உயிரளபெடை எத்தனை வகைப்படும் அவை யாவை?
*பாரதியார் - குறிப்பு வரைக.
* பண்புத்தொகையை விளக்குக.
*அடுக்குத்தொடர் என்றால் என்ன?

தமிழ்த்துகள்

Blog Archive