கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 30, 2022

கல்யாண்ஜி ஆசிரியர் குறிப்பு - KALYANJI



இயற்பெயர் - சி.கல்யாணசுந்தரம். 

 புனைப்பெயர்கள் 

வண்ணதாசன், கல்யாண்ஜி 

ஊர் திருநெல்வேலி 

பிறந்த தேதி 22-08-1946

தந்தை - இலக்கியவாதி தி. க. சிவசங்கரன்.

இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 

நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன்,  

தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 

1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.

 இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. 

இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 

2016 விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சூன் 10, 2018 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.

சிறுகதைத் தொகுப்புகள் 

  1. கலைக்க முடியாத ஒப்பனைகள்
  2. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  3. சமவெளி
  4. பெயர் தெரியாமல் ஒரு பறவை
  5. மனுஷா மனுஷா
  6. கனிவு
  7. நடுகை
  8. உயரப் பறத்தல்
  9. கிருஷ்ணன் வைத்த வீடு
  10. ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது)
  11. சில இறகுகள் சில பறவைகள்
  12. ஒரு சிறு இசை

புதினங்கள்

  1. சின்னு முதல் சின்னு வரை

கவிதைத் தொகுப்புகள்

  1. புலரி
  2. முன்பின்
  3. ஆதி
  4. அந்நியமற்ற நதி
  5. மணல் உள்ள ஆறு

கட்டுரைகள்

  1. அகம் புறம்

கடிதங்கள்

  1. வண்ணதாசன் கடிதங்கள்

தமிழ்த்துகள்

Blog Archive