School morning prayer activities
01-07-2025. செவ்வாய்
திருக்குறள் :
பால் : அறத்துப்பால் ;
இயல்: இல்லறவியல்;
அதிகாரம் : அன்புடைமை ;
குறள் எண் : 076.
குறள் :
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
விளக்கம் :
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று
கூறுவர்: ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
பழமொழி :
கேள்விகள் மலரும் போது மனம் வளர்கிறது.
The mind grows when questions bloom.
இரண்டொழுக்க பண்புகள்:
1. பெரியோர், பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
கட்டளையிடும் பதவி வேண்டுமானால் முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள் - விவேகானந்தர்.
பொது அறிவு :
01.புகழ் பெற்ற மதுராந்தகம் ஏரி எந்த மாவட்டத்தில் உள்ளது?
செங்கல்பட்டு மாவட்டம் Chengalpat district
02. இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டு வங்காள விரிகுடாவில் எத்தனை தீவுகள் உள்ளன?
572 Islands
English words & Tips :
Callous -
கடுமையான
Heartless
இரக்கமற்ற
Grammar Tips:
There are seven coordinating conjunction which can be easily remembered by a word
FANBOYS
For And Nor But Or Yet So
அறிவியல் களஞ்சியம் :
காகிதத்தின் மீது வேகமாக ஊதும் போது, காகிதத்தின் மேல் பகுதியில் காற்று அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகரும். இந்த வகையில் காற்றில் ஏற்படும் வேறுபாடு காகிதத்தை மேல்நோக்கி தூக்கச் செல்கிறது. அது போன்றே பறக்கும் பறவையின் மேல் பகுதி, அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகருகிறது. இந்தக் காற்றின் செயல்பாடே பறவையை மேல்நோக்கி உயரச் செய்து பறக்க வைக்கிறது.
ஜூலை 01
(National Doctors' Day)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் நாள் (National Doctors' Day) .
ஜூலை 01
கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்
கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.
விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது.
ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை.
நீதிக்கதை -துன்பம்!
அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!
சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்.. "உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை.!" கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!
அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!" எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..
"ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!" ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்.. ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..
மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது. இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!
அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..
நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்.!"
நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறைகூறாதீர்கள்..!
இன்றைய செய்திகள் 01.07.2025
*தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அமலுக்கு வந்தது 'வாட்டர் பெல்' திட்டம்.
*இளம் வயதினருக்கு வரும் புற்றுநோய்க்கு HPV வைரஸ் தொற்றே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு.
விளையாட்டுச் செய்திகள்
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் கோலாகல தொடக்கம்: சாம்பியனுக்கு ரூ.35 கோடி பரிசு.
*கிரேட் அமெரிக்கன் பால் பார்க்கில் சின்சினாட்டி ரெட்ஸ் அணி சான் டியாகோ பேட்ரெஸை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பின்தங்கிய நிலையில் வந்தது. 9வது போட்டியில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கிய ஸ்பென்சர் ஸ்டீர் ஆட்டத்தை சமன் செய்தார்.
Today's Headlines - 01.07.2025
The 'Water Bell' scheme was implemented in schools in Tamil Nadu.
The Tamil Nadu government has announced a special incentive of ₹297 crore for those engaged in sugarcane farming.
Doctors reported as HPV virus infection is the cause of cancer in young people
Central government announces 8.2% interest rate for small savings schemes
SPORTS NEWS
Wimbledon Open Tennis: Rs. 35 crore prize money for the champion.
The Cincinnati Reds came from behind to beat the San Diego Padres 3-2 at Great American Ball Park. Trailing 2-1 in the 9th, Spencer Steer tied the game.
