8th Tamil Quarterly Exam Question Answer Key Virudhunagar District 2025
எட்டாம்
வகுப்பு தமிழ்
காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2025
விடைக்
குறிப்பு விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 10x1=10 தமிழ்த்துகள்
1. அ) தார் 1
2. ஆ) ஆழி 1
3. ஆ) தந்தை பெரியார் 1
4. ஆ) கிழிந்தெழில் 1
5. அ) இளமை 1
6. ஈ) இயற்கையை 1
7. அ) படித்தான் 1 தமிழ்த்துகள்
8. இ) கோயில் + அப்பா 1
9. ஆ. தந்தை பெரியார் 1
10. ஈ) பிறிது மொழிதல் அணி 1
கோடிட்ட இடத்தை நிரப்புக.
5x1=5 தமிழ்த்துகள்
11. வீரமாமுனிவர் 1
12. பட்டை 1
13. தலை 1
14. காவிய 1
15. நிறை 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பொருத்துக. 5x1=5 தமிழ்த்துகள்
16. பத்துப்பாட்டு 1
17. சிந்தாமணி 1
18. கம்பராமாயணம் 1
19. பெரியபுராணம் 1
20. திருக்குறள் 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
21. தமிழ், வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும்
அறிந்து வளர்கிறது. 2
22. கடலும் மலையும் கதிரும்
நிலவும் மழையும் பனியும் இயற்கையின் கொடைகள்.
எனவே இயற்கை போற்றத்தக்கது.. 2
23. பட்டமரம் வெட்டப்படும் நாள் வரும் என்று நினைத்துக் கவலை அடைந்தது 2
24. உவமையை மட்டும் கூறி
அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது பிறிது மொழிதல் அணி ஆகும். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
25. மன்னிக்கத் தெரிந்த மனிதனின்
உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது. 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க. 4x2=8
26.
இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி. 2
27. உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகம். வேர், தழை, தாவரங்கள், உலோகங்கள், பாஷாணங்கள். 2
28. எ என்னும் எழுத்திற்குக்
கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாக உருவாக்கினார்.
ஒ என்னும் எழுத்திற்குச்
சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாக உருவாக்கினார். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
29. குறிப்பிட்ட பாடங்களை
நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில்
நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. 2
30. தொடக்க காலத்தில்
எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.
இவ்வரி வடிவத்தையே
ஓவிய எழுத்து என்பர். 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க. 2x2=4
31. 🟢 வல்லின மெய்
எழுத்துகள் ஆறும் மார்பையும்,
🟢 மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கையும்,
🟢 இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தையும்
இடமாகக் கொண்டு
பிறக்கின்றன.
2
32. ண, ன, ந, ல, ழ, ள, ர, ற. 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. க, இய, இயர், அல். 2
வினாக்களுக்கு விடை அளிக்க 3x4=12
34. அ.தமிழ் இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.
முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
ஐம்பெரும் காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.
கடல் முத்துகளைத் தருகிறது.
வெண் சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.
மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.
தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது. 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ.வறியவர்களுக்கு உதவி செய்தல்.
அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.
சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்
குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். 4
35. அ.சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழ வைக்கும்.
எளிமையாகக் கிடைக்கும் காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேருங்கள்.
கணினியிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி
விளையாடுங்கள்.
இரவு தூக்கம் மிகவும் இன்றியமையாதது.
அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது. 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ.ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது
அவை சிதைந்து விடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.
புள்ளியிடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத
நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா, உயிர்மெய்யா, குறிலா, நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம்
வேண்டியது ஆயிற்று. 4
36. அ. ஒரு பாடலில். உவமையும், உவமேயமும் இடம்பெற்று. உவம உருபு வெளிப்படையாக
வந்தால் அது உவமையணி.
இக்குறளில் பழி வருமுன்னே சிந்தித்துத் தம்மைக் காத்துக் கொள்ளாதவனுடைய
வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழிந்து விடும் என்று
குறிப்பிடப்படுகிறது.
உவமேயம் - பழி வருமுன்னே. சிந்தித்துத் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
உவமை - நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போர்.
உவம உருபு - போல. 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ.ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்
ஏவல் வினைமுற்று வியங்கோள்
வினைமுற்று
முன்னிலையில் வரும். இருதிணை, ஐம்பால்,
மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.
ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். வாழ்த்துதல், வைதல், விதித்தல்,
வேண்டல் ஆகிய பொருள்களை
உணர்த்தும்.
விகுதி பெற்றும் பெறாமலும் வரும். விகுதி
பெற்றே வரும். 4
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x5=10
37. உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் தருவது இயற்கை.
உயிர் வாழ்வதற்கு மூச்சுக்காற்று தருவது இயற்கை.
விளைபொருளைப் பெற வழி செய்வது இயற்கை.
சுட்டெரிக்கும் கதிர்களில் இருந்து காப்பது இயற்கை.
மனிதன் தொடர்ந்து உயிர் வாழ முடியும் என்ற நம்பிக்கையைத் தருவது இயற்கை.
இக்காரணங்களால் இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்பட்டது. 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
38. என் மீது வெறுப்பு வரக் காரணம் என்ன? என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
அவர்களுடன் அன்பாகப் பழகுவேன்.
அவர்கள் மனம் புண்படும்படியாக நடந்து கொள்ள மாட்டேன்.
அவர்களிடம் நான் விட்டுக் கொடுத்து நடப்பேன்.
என் அன்பை அவர்களுக்குப் புரிய
வைப்பேன். 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
39. தமிழ் மொழி வரலாற்றுத் தொன்மை, பண்பாட்டு வளம், சொல்வளம், கருத்து வளம் ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது.
அழியாத மொழியாக, சிதையாத மொழியாக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து
கொண்டிருக்கிறது.
தமிழ் மொழி மட்டும் தான் வாழ்வுக்கே இலக்கணம் அமைத்து சிறந்து விளங்கும்
வளமான மொழி ஆகும்.
அகம், புறம் என இரு வகைப்படுத்தி இலக்கணம் கண்ட பெருமை தமிழ் மொழி ஒன்றுக்கே
உண்டு.
இத்தகைய வளமிக்க மொழியாக விளங்குவதால்தான் பாரதியார் தமிழை வண்மொழி
என்று அழைக்கிறார். 5
அடி பிறழாமல்
எழுது. 4+2=6
40. அ.தமிழ்மொழி
வாழ்த்து
வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே! - பாரதியார் 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ.பாடறிந்து
ஒழுகுதல்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை 4
41. தன்குற்றம்
நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு. 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
42.அ. திறமை 1
ஆ. 2. மூலிகைத்தாவரம் 1
43. 2. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். 2
44. அ.தா 1
ஆ.செல். 1
45. அ. தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர் 1
ஆ. வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது 1
46. அ. திருக்குறள்
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. 1
ஆ. தமிழ்மொழி செம்மையானது; வலிமையானது; இளமையானது. 1
47. அ. சித்திரைத்
திங்கள் அன்று நான் வானில் முழு திங்களைப் பார்த்தேன். 1
ஆ. காலை ஆறு மணிக்கு எழுந்து ஆற்றில் குளித்தேன். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
48. அ. 'வெட்டுக்கிளியும் சருகுமானும்' அல்லது ஆ. சகாதேவன் கதை 8
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
49. அ. காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. அல்லது தமிழ்த்துகள்
ஆ. எழுத்துகளின் தோற்றம்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 8
50. அ. நூலகம் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக்
கடிதம்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
