பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
27-11-2025. வியாழன் .
திருக்குறள் :
பால் : பொருட்பால்
; இயல்: அரசியல் ;
அதிகாரம்: இடன் அறிதல்;
குறள் எண் : 492
குறள் :
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும்.
உரை :
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
பழமொழி :
கடினமான பாதைகள் அழகான இடங்களுக்குக் கொண்டு செல்லும்.
Hard path leads to beautiful destinations.
இரண்டொழுக்க பண்புகள்:
1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.
2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.
பொன்மொழி :
அசாதாரணமான வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டாம்.
பொதுவான சந்தர்ப்பங்களை கைப்பற்றி அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள், ஒரிசன் ஸ்வெட் மார்டின் .
பொது அறிவு :
01. பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்?
எம்.எஸ்.சுப்புலட்சுமி-1998
M. S. Subbulakshmi-1998
2.தமிழ்நாட்டின் தாகூர் என்று அழைக்கப்படுபவர் யார்?
கவிஞர் வாணிதாசன்
Poet Vanidasan
English words:
+ mourning-grieving
famished-extremely hungry
தமிழ் இலக்கணம்:
வழூஉச் சொற்கள் என்பவை எழுத்துக்களின் தவறான உச்சரிப்பால் அல்லது பேச்சுவழக்கில் ஏற்படும் பிழைகளால் உருவாகும் சொல்லாகும். இவை சரியான, தூய்மையான தமிழ் சொல்லுக்குப் பதிலாக, மக்கள் பேச்சுவழக்கில் பயன்படுத்துகின்ற தவறான சொற்கள் ஆகும். இனி வரும் நாட்களில் நாம். வழூஉச் சொற்கள் சிலவற்றையும் அதற்கு சரியான சொற்களையும் காண்போம்.
பேச்சுவழக்கு சொல் & சரியான சொல்
1. தாவாரம்- தாழ்வாரம்
2. சின்னாபின்னம் - சின்ன பின்னம்
3. சீயக்காய் - சிகைக்காய்
4. சுவற்றில்- சுவரில்
5. சோத்துப்பானை சோற்றுப் பானை
அறிவியல் களஞ்சியம் :
ஒரு கண்ணாடி ஜாரை மறுசுழற்சி செய்வதன் மூலம் நாம் மூன்று மணி நேரம் தொலைக்காட்சி பயன்படுத்துவதற்காகச் செலவிடும் எனர்ஜியை சேமிக்க முடியும். எனவே மாணவர்களே மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை உபயோகியுங்கள்.
நவம்பர் 27 - புரூஸ் லீ
லீ ஜூன் ஃபேன் புரூஸ் (Lee Jun-fan) (
பிறப்பு நவம்பர் 27, 1940 -இறப்பு ஜூலை 20 1973.
இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும். இவர் ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர்கள், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார்.
இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா, லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்.
நீதிக்கதை
சுண்டெலி மனிதனாக மாறிய கதை
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானியின் முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்து ஞானியின் முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று கேட்டார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.
சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுங்கள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூனாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.
இன்றைய செய்திகள் 27.11.2025
* வரும் 29ம் தேதி அதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
* இந்தியாவில் திடீரென முடங்கிய கூகுள் மீட் சேவை - பயனர்கள் அதிர்ச்சி
* எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்த தால், வானில் 14 கி.மீ உயரம் வரை சாம்பல் மேகங்கள் பறந்தன. இதனால் சர்வதேச விமானப்பாதைகள் குழப்பத்தில் சிக்கியுள்ளன.இந்த சாம்பல் மேகம், விமான இன்ஜின்களுக்கு ஆபத்தானது.
விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
* முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
Today's Headlines - 27.11.2025
* Chief Minister will hold an important meeting with officials tomorrow at 11 am regarding red alert has been issued for heavy rains on the 29th November.
* Users shocked due to Google Meet service suddenly stopped in India yesterday.
* The eruption of the Haley Cup volcano in Ethiopia sent ash clouds as high as 14 km into the sky. This has disrupted international flights. This ash cloud is dangerous for aircraft engines.
SPORTS NEWS
Indian batsman Rohit Sharma has regained the top spot in the ODI batsman rankings. * The New Zealander who was at the top has been relegated to the second spot.
Prepared by
Covai women ICT_போதிமரம்
