10th Tamil Second Mid Term Exam Answer Key 2025 Virudhunagar District
பத்தாம் வகுப்பு தமிழ்
இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2025
விடைக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 8x1=8 தமிழ்த்துகள்
1. இ.சேர நாடு, சோழ நாடு 1
2. இ.குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் 1
3. ஈ.சிலப்பதிகாரம் 1
4. இ.பூம்புகார்
1
5. இ.வலிமையை நிலைநாட்டல்
1
6. இ.பழுப்பு 1
7. அ.சிலப்பதிகாரம் 1 தமிழ்த்துகள்
8. பகர்வனர் - நகரவீதியும் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9. அ. இளமைப் பருவத்திலேயே யாருடைய பகுத்தறிவுக் கருத்துகள் கலைஞரை
ஈர்த்தன? 1
ஆ. எந்த நாள் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால்
பொறிக்கத்தக்க புனிதநாளாகும்? 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
10. 1.ம.பொ.சி.யிடம் நூல்
வாங்குவதற்குப் போதிய பணமில்லாததால், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, குறைந்த விலைக்குப் புத்தகங்களை வாங்குவதை
வழக்கமாகக் கொண்டார். 1
2.மேலும் உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டுப்
பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
11. 1.பாசவர் - வெற்றிலை
விற்போர்.
2.வாசவர் - ஏலம் முதலான நறுமணப் பொருள்கள் விற்பவர்.
3.பல்நிண விலைஞர் -
பல்வகை இறைச்சி விற்பவர்.
4.உமணர் - வெண்மையான உப்பு விற்பவர். 2
12. பழநியப்பன்,
சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ, தூக்குமேடை. ஏதேனும் 2 2
13. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. 2
கட்டாய
வினா
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
14.
1. கம்பர்
2. உமறுப்புலவர்
3. ஜவாது ஆசுகவி
4. காசிம் புலவர்
5. குணங்குடியார்
6. சேகனாப் புலவர்
7. செய்குதம்பிப்பாவலர் 2
15. காற்று மாசுபாட்டைக்
குறைக்க குப்பை மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும். பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை
தந்து மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும். 2
16. உழவர்கள் வயலில்
உழுதனர்.
நெய்தல் பூச்செடியைப்
பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர் 2
17. அ. நாற்றிசை - நான்கு + திசை – ௪ 1
ஆ. முத்தமிழ் -
மூன்று + தமிழ் – ௩ 1
18.படிப்போம் பயன்படுத்துவோம்
அ. கதை சொல்லி 1
ஆ. எல்லை 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x3=12
19. குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட,
விரிதாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்ற,
சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ,
மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காண,
நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச் சீலைகளாய் விரிய,
மகர யாழின் தேன் ஒத்த இசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம்
வீற்றிருக்கிறது. 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
20. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்
இடம் –
மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில்
சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து ம.பொ.சிவஞானம் அவர்கள் முழங்கிய வரி இதுவாகும்.
பொருள் -
தலையைக் கொடுத்தேனும்
(உயிரைக் கொடுத்தேனும்) தலைநகரைக் காப்போம் (சென்னையைக் காப்போம்)
விளக்கம் –
1.ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும்
என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.
2.நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையம் இதற்குப் பரிந்துரைத்திருப்பதாக
அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவியது.
3.சென்னை மாநகரின் சிறப்புக்கூட்டம் இதற்காகக் கூட்டப்பட்டபோது என்ன
விலை கொடுத்தேனும் சென்னையை நம்மோடு வைத்துக் காக்க வேண்டும் என்ற பொருளில் கூறப்பட்ட
தொடர். 3
21. வஞ்சப்புகழ்ச்சி
அணி
ஒரு செய்யுளில் ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக வருவது வஞ்சப்புகழ்ச்சி
அணி ஆகும்.
அணிப் பொருத்தம்
தேவர்கள் தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்தல் போல கயவர்களும்
தாம் விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர்.
இக்குறளில் தேவருக்கு நிகராகக் கயவரைப் புகழ்ந்து கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி
அணியாகும். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
22. 1) மனோன்மணியம்
சுந்தரனாரின் 'நீராருங் கடலுடுத்த' பாடலை அரசு விழாக்கள் அனைத்திலும் தொடக்கப் பாடலாக பாடுவதற்கு வழி வகுத்தார்.
2) 2010 ஆம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தி, செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலை
இயற்றி வெளியிட்டு தமிழுக்குச் சிறப்பு செய்தார். 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
23. வஞ்சி – மண்ணாசை கருதி பகைவர் நாட்டைக்
கைப்பற்றுவதற்காகப் போர் தொடுக்கச் செல்லும் அரசர் வஞ்சிப்பூவைச் சூடிச் செல்வது
காஞ்சி – ஓர் அரசர் மண்ணாசை கருதி தனது நாட்டைக்
கைப்பற்றுவதற்காகப் போர் தொடுக்க வந்த மாற்றரசருடன் எதிர்சென்று போரிடுவது. 3
24. கட்டாய வினா.
அ.வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோஇவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்.
அல்லது
ஆ. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு. 3
விடை அளிக்க 2x5=10
25. அ. கடிதம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ. சங்ககாலத்தில் தமிழ்நாட்டின்
நிலஅமைப்பு ஐந்து புவியியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மருதம் என்பதே
நல்ல பண்பட்ட, தகுதி வாய்ந்த நாகரிகமாக இருந்தது. ஏனெனில் அது வளமிக்க நிலங்களைக்
கொண்டிருந்தது. உழவர்களின் சொத்து என்பது தேவையான சூரிய ஒளி, பருவ மழை, மண்ணின் வளம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது.
இத்தகைய இயற்கைக் கூறுகளின் மத்தியில் சூரிய ஒளி பழங்காலத் தமிழர்களால் தவிர்க்கமுடியாததாகக்
கருதப்பட்டது.
26. அ. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக
வீதிகள், இன்றைய அங்காடிகள்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள் அல்லது
ஆ. பொருத்தமாக
கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
விடை அளிக்க
1x8=8
27. அ. பாய்ச்சல் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
