9th Tamil Second Mid Term Exam Answer Key 2025 Virudhunagar District
ஒன்பதாம்
வகுப்பு தமிழ்
இரண்டாம்
இடைத் தேர்வு நவம்பர் 2025
விடைக்
குறிப்பு
விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 8x1=8 தமிழ்த்துகள்
1. ஆ. களர் நிலம் 1
2. ஆ. பட்டம் செய்திருக்கிறேன் 1
3. 4. ஆ மட்டும் சரி 1
4. அ. மாமல்லபுரம் 1
5. இ. முல்லை 1
6. ஆ. தீர்த்தங்கரர் உருவங்கள் 1
7. ஆ. புலவர் குழந்தை 1 தமிழ்த்துகள்
8. இ. தேன் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9. விஜயநகர மன்னர் 2
10. 🛟பெண்கள்
முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். 1
🛟எனவே அதைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு சாரதா சட்டம் இயற்றப்பட்டது. 1
11. 🛟கல்வியறிவு இல்லாத பெண்கள் பயன்படாத நிலத்தைப் போன்றவர்கள்.
1
🛟கல்வியறிவு இல்லாத பெண்கள் வாயிலாக அறிவுடைய மக்கள் உருவாக
மாட்டார்கள். 1
12. சோழர் காலம். 2
13.
🛟அவனுக்குப்
புத்தகம் கொடு. 1
🛟அவனுக்குச்
சொல்லிக் கொடு 1
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
14. நெறிப்படுத்தினர்
- நெறிப்படுத்து+இன்+அர்
நெறிப்படுத்து
- பகுதி
இன் - இறந்த கால இடைநிலை
அர் - பலர்பால் வினைமுற்று விகுதி 2
15. அ. தன்னார்வலர் 1
ஆ. பெருங்கடல் (அ) மாக்கடல் 1
16. அ. பவளவிழிதான் பரிசுக்கு
உரியவள். 1
ஆ. நல்ல தமிழில் எழுதுவோம். 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
17. அ. வேறுபடுத்திக்காட்டுவது. 1
ஆ. புதுப்பித்துக் கொள்ளும் 1
18.அ. இடம்,
அறை, நாடகசாலை,
சபை. 1
ஆ. காடு, மணம், பூ 1
ஏதேனும் ஒரு சொல்
எழுதியிருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x3=12
19. அ. சமைப்பவர்
உணவை மட்டும் சமைப்பதில்லை அதற்கு மேலாக இன்பத்தையும் படைக்கின்றார். சமைப்பவர் இன்பம்
சமைப்பவர் ஆவார்.
ஆ. பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வு அல்ல!
"உணவினை ஆக்கல் மக்கட்கு உயிர் ஆக்கல்
அன்றோ?" என்று அவர் கேட்பதன் மூலம் இதனை அறியலாம். 3
20. ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார்,
ஆதிமந்தியார், வெண்ணிக்குயத்தியார்,
பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார்,
நக்கண்ணையார், காக்கைப்பாடினியார்,
வெள்ளிவீதியார், காவற்பெண்டு,
நப்பசலையார். 3
6 பெயர்கள் எழுதியிருந்தால்
முழுமதிப்பெண் வழங்கலாம்
21. தனித் தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார் அவர்கள் மறைமலை அடிகளின்
மகள் ஆவார்.
தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்.
இவரது தனித் தமிழ்க்கட்டுரை, வடசொல்-தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள்
தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளவை. 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
22. ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்களைச் செதுக்கினர்.
கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள்
விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிகமிக நுட்பமாகக் கலைநயத்துடன் படைக்கப்பட்டுள்ளன. 3
23. புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராவண
காவியத்தில் ஐவகை நில வருணனைகள் வருகின்றன.
தீயிலிட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின்
மணமும், காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரந்து
கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் குறிஞ்சி நிலத்தில் மணம் கமழ்ந்து காணப்பட்டன. 3
24. கட்டாய வினா.
உயிர்வகை
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்
தினரே - தொல்காப்பியர் 3
விடை அளிக்க 2x5=10
25. அ. ஐவகை நிலங்களில் இயற்கைக் காட்சிகள் சொல் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
அருவிகள் பறையாய் ஒலிக்கும்.
பைங்கிளி தான் அறிந்த தமிழிசையைப் பாடும்.
பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான சிறகினை விரித்து ஆடும்.
இக்காட்சியைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கினம்
மிரட்சியுடன் பார்க்கும்.
"மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்" என்று குறிஞ்சி நிலத்தின்
வளம் கண்முன் நிறுத்தப்படுகிறது.
கொடிய பாலை நிலத்து வெயிலின் வெப்பத்தைத் தாங்க இயலாத செந்நாய்க் குட்டி வாய் மிகவும் உலர்ந்து
குழறியது கண்டு அதன் தாய் வருந்தியது.
குட்டி இளைப்பாற எங்கும் நிழல் இல்லாததால் கடும் வெயிலில் தான் துன்புற்று
நின்று, தனது நிழலில் குட்டியை இளைப்பாறச் செய்தது.
"தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற நன்னரில் வலிய செந்நாய் உயங்குமே"
என்று பாலை நிலத்திலும் வற்றாத அன்பை வடித்திருக்கிறார்.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 5
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ. கடிதம்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 5
26. கவிதை
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 5
விடை அளிக்க 1x8=8
27. அ. தமிழ்நாட்டுச் சிற்பங்கள்
அல்லது
ஆ. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின்
வானொலி உரை 8
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
