கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, November 30, 2025

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

 6th tamil model notes of lesson

lesson plan December 8

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.பருவம்

2

3.அலகு

1,2

4.பாடத்தலைப்பு

இரண்டாம் பருவம் முழுவதும்

இரண்டாம் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/2025_88.html

https://tamilthugal.blogspot.com/2025/11/6_49.html

5.திருப்புதல் வினாக்கள்

உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?

தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?

பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.

இன எழுத்துகள் என்றால் என்ன?

மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை? 

எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார்?

நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்? 

தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?

காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?

ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

அ. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது

ஆ. அது ஒரு இனிய பாடல்           தமிழ்த்துகள்

சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக.

அ. பொன்னன் முன்னேறினான். (வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)

ஆ. நான் பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு, அரசு)

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்.

அ. நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை).

ஆ. நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு).

பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.

அ. நன்ரி       ஆ. கன்டம்             தமிழ்த்துகள்

உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.

அறிவுசால் ஔவையார் என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக.

பொங்கல் திருநாள் – கட்டுரை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive