கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, November 28, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2025. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

28-11-2025. வெள்ளி

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம்: இடன் அறிதல்;

குறள் எண் : 494.

குறள் :

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.

உரை :

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

பழமொழி :

> முயற்சி தான் கனவு மற்றும் நிஜம் இடையேயான பாலம்.

Effort is the bridge between dreams and reality.

இரண்டொழுக்க பண்புகள்:

1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.

2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.

பொன்மொழி :

+ அன்பே சொர்க்கத்தின் நுழைவாயில். அன்புடன் பெருந்தன்மையான செயல்கள் புரியும்போது கடவுள் நம்மிடம் இருக்கிறார். லூகி லார்கம்.

பொது அறிவு :

01.இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதுஎது?

தாதா சாகிப் பால்கே விருது 

Dadasaheb Phalke Award

02. இந்தியாவின் ""டெக்கான் ராணி"" என்று அழைக்கப்படும் நகரம் எது

பூனே - Pune

English words :

+ slip-fall because the ground is slippery,

trip-fall because foot hit something

தமிழ் இலக்கணம்: வழூஉசொற்கள்/ திருத்தம்

1. அடமழை அடைமழை

2. கோடாலி - கோடாரி

3. கருவேப்பிலை - கறிவேப்பிலை

4. அருவாமனை அரிவாள்மனை

5. துவக்கப் பள்ளி - தொடக்கப்பள்ளி

அறிவியல் களஞ்சியம் :

இதயத்தின் வேலை என்பது, இரண்டு காரணிகளால் நடைபெறுகிறது. இதயத் தசைகளில் ஏற்படும் மின் தூண்டுதல்கள் இந்த மின் தூண்டலினால் இதய அறைகளில் இருந்து இரத்தம் பீய்ச்சி அடிக்கப்படுவது.

நீதிக்கதை - துளையிட்ட காசு

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன் என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.

அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. எல்லாம் காசு கிடைத்த நேரம் என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசைத் தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போல் உள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் என்றாள்.

இது எப்போது நடந்தது? என்று கேட்டான்.

அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள்.

அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான் என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்...!

இன்றைய செய்திகள் 28.11.2025

*தமிழகத்தில் தற்போது பருவமழை காரணமாகக் குளிர்ச்சி நிலவி வரும் நிலையில், சுவாசப் பாதிப்புகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பாதுகாப்புடன் இருக்கும் படி சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

* ஓசோனை சேதப்படுத்தும் ஆபத்தான ரசாயனங்கள் தடை செய்யப்பட்டதால் ஓசோன் துளையின் அளவு குறைந்துள்ளதாக நாசா (NASA) மற்றும் என்ஓஏஏ (NOAA) விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

* தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது.

* வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

20 ஓவர் கிரிக்கெட் போட்டி மகளிர் பிரிமீயர் லீக் தொடர் தொடங்கும் தேதி மற்றும் போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு.

மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்குகிறது.

இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.

Today's Headlines - 28.11.2025

* The health department has warned senior citizens over the age of 65 and children to stay safe. So far days with the current monsoon season in Tamil Nadu, there has been an increase in respiratory infections and the spread of influenza.

* NASA and NOAA scientists have announced that the size of the ozone hole has decreased due to the ban on dangerous chemicals that damage ozone.

* The prevailing low pressure area over the southwest Bay of Bengal has strengthened into a deep depression. It is likely to move north-northwestwards and intensify further into a cyclonic storm.

SPORTS NEWS

The Women's Premier League series of 20-over cricket has been announced with the start date and venues. The Women's Premier League series will start on January 9 next year. The series will be held in Navi Mumbai and Vadodara.

Prepared by

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive