கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, November 30, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

10th tamil model notes of lesson

lesson plan December 8

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

அரையாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

கட்டுரை படித்த - இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக.

மென்மையான மேகங்கள் துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி, விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத் தொகையாக மாற்றி எழுதுக.

தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக;

தொடரில் அமைக்க.

நச்சப் படாதவன்’ செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.


செல
வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?

“கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்” -

இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்?

காதல்மிகு கேண்மையினான் யார்?

மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் -  இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்

இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

அயற்கூற்றாக எழுதுக.

"கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார்.

உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’

காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்?

எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

தமிழ்த்துகள்

Blog Archive