கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, November 30, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

9th tamil model notes of lesson

lesson plan December 8

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.அலகு

1 - 5

3.பாடத்தலைப்பு

5 இயல்கள்

அரையாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/blog-post_90.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2025_23.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2025-9.html

4.திருப்புதல் வினாக்கள்

நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?

இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும் என்பதைக் 'குடும்ப விளக்கு' கருத்தின் வழி எழுதுக.

நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?   

முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச்சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.

குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.

அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.

ஒற்றளபெடையை விளக்குக.

ஏகதேச உருவக அணியை விளக்குக.

ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக.

இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் ‘செய்தி’ கதையின் மூலமாக விளக்குக.                    

புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.

பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க

தமிழ்த்துகள்

Blog Archive