விருதுநகர் மாவட்டப் பொதுத்தேர்வுகள்
அரையாண்டுப் பொதுத் தேர்வு - டிசம்பர் 2022
விடைக்குறிப்புசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 15x1-15
சருகும் சண்டும்
வேற்றுமை உருபு
அறியாவினா, சுட்டு விடை
இறைவனிடம் குலசேகராழ்வார்
தளரப் பிணைத்தால்
சிலப்பதிகாரம்
அகவற்பா
நறுமணம்
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
சின்னப்பிள்ளை
பாரதியார்
பெருங்கௌசிகனார்
ஒலிக்கும்
சொல்லிசை அளபெடை
அன்று - கன்று
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும் 4x2-8
21 கட்டாய வினா
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்
தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது எது?
ம. பொ.சி.யிடம் நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாததால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று குறைந்த விலைக்குப் புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டார்.
உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டுப் பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.
கையிலே வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார்.
நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்
முகமலர்ச்சியுடன் விருந்தினரை நோக்குதல்
வீட்டிற்குள் வருக என்று வரவேற்றல்
விருந்தினர் மனம் மகிழும் படி பேசுதல்
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும் 5x2-10
காகத்திற்குக் காது உண்டா? அதற்குக் காது கேட்குமா? எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு செவித்துளைகள் இறகுகளால் மூடி இருக்கும்
பதிந்து பதி+த்+(ந்)+த்+உ
பதி- பகுதி
த் - சந்தி ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
தான் - தாம். விடு - வீடு
தான் என்ற எண்ணம் நீங்கி தாம் என்ற எண்ணம் வர வேண்டும்
என்னை விடு என்று கூறி வீடு நோக்கி நடந்தான்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
வேங்கை என்னும் சொல் வேங்கை மரம், புலி ஆகிய பொருள்களை உணர்த்துவதால் தனிமொழி
வேம் + கை என வேகின்ற கை என்ற பொருள் உணர்த்துவதால் தொடர்மொழி
தனி மொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைந்துள்ளதால் பொதுமொழி
கலைச்சொற்கள்
அ.பக்தி இலக்கியம்
ஆ.மனிதநேயம்
முதற்பொருள்- நிலம் - காடு சிறுபொழுது - மாலை பெரும்பொழுது - கார்காலம் கருப்பொருள்- உணவு - வரகு
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும் 2x3-6
மொழிபெயர்ப்பு இசையமைப்பு மகிழுந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்ய கணினிக் கரங்கள் நீள்கின்றன
கட்டுரை எழுதும் மென்பொருள்கள் கவிதை பாடும் எந்திரங்கள் ஆள்கள் இல்லாமல் நடத்தப்படும் வணிகக் கடைகள் எனப் புதிது புதிதான வழிகளில் மனிதப் பணித்திறனைக் கூட்டுகின்றன இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்
அதே வேளையில் மனிதனை சோம்பேறியாகவும் மூளையின் சிந்தனைத் திறனுக்கு ஓய்வு கொடுப்பது போலவும் இதனால் ஏற்படும் கதிர்வீச்சுகளுக்கு நம் சந்ததியினர் பாதிப்பதாகவும் உணர்ந்தால் இன்னும் சற்றுக் கவனத்தோடு நாம் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கையாள வேண்டும்
இடம் - சென்னை மாநகராட்சிச் சிறப்புக் கூட்டம்
பொருள் - உயிரைக் கொடுத்தாவது தலைநகரத்தைக் காப்பாற்றுவோம்
விளக்கம் - ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னை தான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்
சென்னை ஆந்திர மாநிலத்திற்குச் சொந்தமாக விடமாட்டோம் என்ன விலை கொடுத்தேனும் சென்னையைக் காப்போம் என்று ம.பொ.சி. அவர்கள் முழங்கினார்
அ.அதிகன்
ஆஇரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல்
இ.தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும் 2x3-6
34 கட்டாய வினா
தமிழ் இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது
கடல் முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது
தமிழ் முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது
கடல் வெண் சங்கு சலஞ்சலம் பாஞ்சசன்யம் ஆகிய மூவகைச் சங்குகளைத் தருகிறது
தமிழ் ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாய்ப் பெற்றது
கடல் மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது
குலேசபாண்டியன் தமிழ்ப் புலமையில் சிறந்தவன்
கபிலரின் நண்பர் இடைக்காடனார் தன் கவிதையை அவன் முன் பாட அதை பொருட்படுத்தாமல் அவரை அவமதித்தான்
மனம் வருந்திய இடைக்காடனார் இறைவனிடம் முறையிட மன்னனின் பிழை உணர்த்த இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி வட திரு ஆலவாயில் சென்று தங்கினார்
இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டி இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்
நீதி வெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று
செய்கு தம்பிப் பாவலர்
காலக்கணிதம்
மாற்றம் எனது மானுடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை
தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்
கண்ணதாசன்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும். 2x3-6
நிறைத்திருந்தது - நிறைந்திருந்தது
வாழைத் தோப்பில் - வாழைத் தோட்டத்தில்
குட்டியுடன் - கன்றுடன்
லட்சுமி கூப்பிடுகிறாள் - பசு கத்துகிறது
இதோ சென்று விட்டேன் - இதோ செல்கிறேன்
என்னடா விளையாட வேண்டுமா - என்ன
அவனை - அதனை
நீயும் இவனும் - நீயும் இதுவும்
குடித்தால் - குடித்தது
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குச் சென்றபோது மதில் மேல் இருந்த கொடி காற்றில் அசைந்தது. கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக் கருதி கொடிகள் கையசைத்து மதுரைக்கு வர வேண்டாம் என தெரிவிப்பது போல அசைவதாக தன் குறிப்பை இளங்கோவடிகள் ஏற்றிக் கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி
செய்/க நே நே தேமா
பொரு/ளைச் நி நே புளிமா
செறு/நர் நி நே புளிமா
செருக்/கறுக்/கும் நி நி நே கருவிளங்காய்
எஃ/கத/னிற் நே நி நே கூவிளங்காய்
கூ/ரிய நே நி கூவிளம்
தில் நே நாள்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும். 5x5-25
அ, அல்லது ஆ
அ, அல்லது ஆ
கவிதை
படிவம்
அ அல்லது ஆ
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும். 3x8-24
அ அல்லது ஆ
அ அல்லது ஆ
அ அல்லது ஆ
பொருத்தமாக எழுதி இருக்கு மதிப்பெண் வழங்கவும்