கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, January 30, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் கூடுதல் ஒரு மதிப்பெண் வினா விடை pdf 8th tamil additional one mark questions with answers

பதிவிறக்கு/DOWNLOAD

ஒன்பதாம் வகுப்பு தமிழ் கூடுதல் ஒரு மதிப்பெண் வினா விடை pdf 9th tamil additional one mark questions with answers

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் சனவரி 2023 10th social science English medium first revision exam question paper virudhunagar

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் சனவரி 2023 10th social science tamil medium first revision exam question paper virudhunagar

பத்தாம் வகுப்பு தமிழ் கூடுதல் குறுவினா விடைகள் இயல் 1 Tenth 10TH TAMIL Inside SHORT Q&A unit 1 sslc

Friday, January 27, 2023

பரந்தாமன் புகழ் பாடும் திருப்பாவை தமிழ்க் கட்டுரை பேச்சு paranthaman pukal paadum thiruppavai speech

பரந்தாமன் புகழ் பாடும் திருப்பாவை தமிழ்க் கட்டுரை, பேச்சு pdf paranthaman pukal padum thiruppavai tamil essay speech

 பதிவிறக்கு/DOWNLOAD

10ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 10th model notes of lesson tamil பிப்ரவரி 6

  நாள் - 06-02-2023

பாடம் - தமிழ்

திருப்புதல் வினாக்கள்


விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகள் யாவை?

செயல் – என முடியும் திருக்குறளை எழுதுக.

பாடாண்திணையை விளக்குக.

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

வள்ளுவம்சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

"சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது" -  இடஞ்சுட்டிப் பொருள் தருக.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

     நாகரிகம் வேண்டு பவர். – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

சான்றோர் வளர்த்த தமிழ் - கட்டுரை எழுதுக.

நிகழ் கலை வடிவங்கள் - அவை நிகழும் இடங்கள் - அவற்றின் ஒப்பனைகள் - சிறப்பும் பழைமையும் - இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் -அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன - இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.

மேரியிடம் இருந்து பறிக்கப்பட்ட புத்தகம்அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

தன்மையணியை விளக்குக.


மாதிரி பாடக்குறிப்பு எட்டாம் வகுப்பு தமிழ் 8th tamil model notes of lesson february 6

 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-02-2023 முதல் 10-02-2023

2.திருப்புதல்

யாருக்கு எமனைப்பற்றிய அச்சம் இல்லை?

குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?

அயோத்திதாசரின் இதழ்ப்பணி பற்றி எழுதுக.

மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.

அந்தாதி என்றால் என்ன?

அசை .......................... வகைப்படும்.

அயோத்திதாசர் நடத்திய இதழ் ......................

ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ....................

ஒன்றே ........... என்று கருதி வாழ்வதே மனிதப் பண்பாகும்.

பொருள் தருக.

நம்பர், பராபரம், பகராய், ஈயில்.

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.


மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல் 2 உரைநடை model notes of lesson 7th term 3 unit 2

 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-02-2023 முதல் 10-02-2023

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஒப்புரவு ஒழுகு – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

ஒப்புரவு நெறி

6.பக்கஎண்

27 - 31

7.கற்றல் விளைவுகள்

T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின்மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

8.திறன்கள்

ஒரு கருத்தை மையப்படுத்திய கட்டுரைகளின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினை உணர்ந்து பயன்படுத்தும் திறன்.

9.நுண்திறன்கள்

ஒப்புரவு குறித்து அறிதல். கூடி வாழ்தலை அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2_27.html 

https://tamilthugal.blogspot.com/2021/02/2-3-oppuravu-neri-7th-tamil-kuru-vina.html 

11.ஆயத்தப்படுத்துதல்

உதவுதல் பற்றிக் கூறச்செய்தல்.

அறநெறியில் வாழ்தல் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

உதவி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

வாழ்வின் குறிக்கோள், வாழ்வும்  ஒப்புரவும், ஒப்புரவின் இயல்பு, பொருள் ஈட்டலும் ஒப்புரவும், ஒப்புரவின் பயன், ஒப்புரவும் கடமையும் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். ஒப்புரவு நெறி குறித்து விளக்குதல். 

புறநானூறு, திருக்குறள் பாடல்களை விளக்குதல். மாணவர்களை அறநெறிகள் குறித்து அறியச் செய்தல். ஊருணித் தண்ணீர், மருந்து மரம் குறித்து விளக்குதல்.

 


மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிறருக்கு உதவும் பண்பை வளர்த்துக் கொள்ளுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

உதவுதலின் சிறப்பு குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

LOT – செல்வத்தின் பயன்............................... வாழ்வு.

MOT – ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?

HOT – ஒப்புரவுக்கும் உதவிசெய்தலுக்குமுள்ள வேறுபாடு யாது?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.

நீங்கள் செய்த உதவிகளைப் பட்டியலிடுக.

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 3 உரைநடை tamil model notes of lesson 6th unit 2 term 3

 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-02-2023 முதல் 10-02-2023

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

எல்லாரும் இன்புற – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

பசிப்பிணி போக்கிய பாவை

6.பக்கஎண்

24 - 27

7.கற்றல் விளைவுகள்

T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

8.திறன்கள்

பிறர் பசியைப் போக்கும் உயர் சிந்தனையை வளர்த்தல் திறன்.

பெற்றோரையும் பெரியோர்களையும் மதிக்கும் பண்பு பெறுதல் திறன்.

9.நுண்திறன்கள்

அறஇலக்கியங்கள் கூறும் கருத்துகள் குறித்து அறிதல். 

பசிப்பிணி போக்கும் பண்பை அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video.html  

https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video_19.html  

https://tamilthugal.blogspot.com/2021/02/pasippini-pokkiya-pavai-kuruvina-6th.html  

https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_27.html    

https://tamilthugal.blogspot.com/2020/06/manimegalai.html  

https://tamilthugal.blogspot.com/2022/05/chithalai-chathanar.html  

11.ஆயத்தப்படுத்துதல்

பசியின் கொடுமை, பஞ்சம் பற்றிக் கூறச்செய்தல்.

மணிமேகலை குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

மணிமேகலை, துறவு பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

அமுதசுரபி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். மணிமேகலை குறித்து விளக்குதல். ஆதிரை பற்றிக் கூறுதல்.

பசி குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். தீவதிலகை குறித்து விளக்குதல். வாழ்வைச் செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல். உணவின் இன்றியமையாமை குறித்து விளக்குதல். சிறைச்சாலை அறச்சாலையாக மாற நாம் செய்ய வேண்டியவை குறித்து கலந்துரையாடல்.

 


மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

ஐம்பெருங்காப்பியங்கள் குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

LOT – அமுதசுரபியில் உணவு இட்ட பெண்..............................

MOT – அமுதசுரபியின் சிறப்பை விளக்குக.

HOT – பசியால் வாடுபவர்களுக்கு உதவுதல் பற்றி எழுதுக.

அறச்செயல்களாக நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பிறர் பசி போக்க நீ செய்த செயல்களைக் கூறு.

பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தைக் கதை வடிவில் எழுதுக.


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 ஒப்புரவு நெறி மனவரைபடம் 7th tamil mindmap term 3 unit 2

 


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 பசிப்பிணி போக்கிய பாவை மனவரைபடம் 6th tamil mindmap term 3 unit 2

 


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் நாமக்கல் சனவரி 2023 10th social science English medium first revision exam question paper Namakkal

12ஆம் வகுப்பு வேதியியல் முதல் திருப்புதல் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் சனவரி 2023 12th chemistry tamil medium first revision exam question paper virudhunagar

பத்தாம் வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் சனவரி 2023 10th science English medium first revision exam question paper virudhunagar

பத்தாம் வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் சனவரி 2023 10th science tamil medium first revision exam question paper virudhunagar

Thursday, January 26, 2023

வேலுநாச்சியார் நாடகம் அரசுப்பள்ளி மாணவிகளின் படைப்பு VELU NACHIYAR DRAMA BY GOVT SCHOOL 6TH STUDENTS

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு கள்ளக்குறிச்சி pdf 10th tamil slow learners guide kallakurichi

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் பயிற்சி ஏடு pdf தஞ்சை 10th tamil slow learners guide work book

 பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 முழு வினாவிடை pdf 7th tamil term 3 full notes

பதிவிறக்கு/DOWNLOAD

திரு.சேட்டுமதார்சா
ஈரோடு 

தொன்னூறா, தொண்ணூறா? எது சரி? - எளிய விளக்கம் 90 correct tamil spelling

தொன்னூறா, தொண்ணூறா?

எண்களை எழுத்தால் எழுதுகையில் சிலர்க்குக் குழப்பம் ஏற்படும். அதிலும் குறிப்பாக 90 என்ற எண்ணை எழுதுகையில் பலரும் தவறாகவே எழுதுகிறார்கள். 
தொன்னூறு என்று எழுதிவிடுகிறார்கள். 

தொன்னூறு என்பது பிழை. தொண்ணூறு என்பதே சரி. 

இந்த ஐயத்தை முழுமையாய்த் தீர்க்க வேண்டுமென்றால் தொன்னூறு என்பதன் பொருளை அறியவேண்டும். 

தொண்ணூறு என்பதற்கும் ஒரு பொருள் இருக்குமன்றோ ? அதனையும் அறிய வேண்டும். 

அவ்வாறு ஐயந்திரிபற அறிந்துவிட்டால் எழுதுவதில் பிழையே ஏற்படாது.

தொன்னூறு என்பதைப் பிரித்தால் என்ன கிடைக்கும்? 
தொல் + நூறு என்று கிடைக்கும். 

தொல் என்பதற்குப் ‘பழைமையான’ என்று பொருள். பழைய பொருளைத் தொல்பொருள் என்கிறோம். 
வரலாற்றுப் பழைமை மிக்க இடங்களைத் தொல்லிடம் என்கிறோம்.

ல் என்று முடியும் ஒரு சொல் புணர்ச்சியின்போது ன் என்று மாறும். இரண்டாம் சொல் மகர அல்லது நகர எழுத்தில் தொடங்க வேண்டும். 

முதல் + முதலாக = முதன்முதலாக

சொல் + நலம் = சொன்னலம்

இங்கே புணர்ச்சியில் வருமொழி மகர அல்லது நகர எழுத்தாக இருக்கையில் ல் என்ற மெய் ன் ஆகிவிட்டது. அதன்படி தொன்னூறு என்ற சொல் தொல் + நூறு ஆகிய இரு சொற்களின் சேர்க்கை. பழைய நூறு என்ற பொருளைத்தான் தரும். ஆகவே 90 என்ற எண்ணைத் தொன்னூறு என்று எழுதுவது பிழை.

அப்படியானால் தொண்ணூறு என்று ஏன் வரவேண்டும் ?

தொண்ணூறு என்னும் சொல் தொள் + நூறு என்று பிரியும். ள் என்ற மெய்யெழுத்து புணர்ச்சியின்போது ண் என்று மாறும். வருமொழி மகர, நகர எழுத்தில் தொடங்கினால் இது கட்டாயம்.

அருள் + மொழி = அருண்மொழி

வெள் + மை = வெண்மை

மருள் + நீக்கீயார் = மருணீக்கியார் 

ஆகவே தொள் + நூறு என்பதுதான் தொண்ணூறு. 
தொள்ளாயிரம் என்று சொல்கிறோம். அதில் தொள் + ஆயிரம் ஆகிய சொற்கள்தாம் உள்ளன. 
தொண்ணூற்றிலும் தொள் + நூறு ஆகிய சொற்களே இருக்க வேண்டும்.

தொண்ணூறு என்பதன் பொருள் என்ன? 

தொள்ளு என்று ஒரு வினைவேர் இருக்கிறது. தொள்ளுதல் என்றால் வலிமை குன்றி நெகிழ்தல். தளர்ந்து நெகிழ்தல். 
அணியும் ஆடை இறுக்கமின்றி நெகிழ்வாக இருந்தால் எப்படிச் சொல்கிறோம்? 
“தொளதொளன்னு இருக்குது” என்கிறோம். 
அந்தத் ‘தொள’ என்னும் சொல்தான் தொண்ணூற்றிலும் தொள்ளாயிரத்திலும் இருக்கிறது. 

தொண்ணூறு என்று ஒன்பது பத்துகளைச் சொல்கிறோம். 
பத்தின் தன்மை வலிமையிழந்து நெகிழ்கிறது. 
நூற்றினை அடையப்போகிறது. அதனால்தான் தொண்ணூறு என்கிறோம். 
தொள்கின்ற நூறு. 
நூற்றின் தன்மை வலிமையிழந்து ஆயிரத்தை அடையும் இடத்தைத் தொள்ளாயிரம் என்கிறோம்.

தொண்ணூறு என்பதன் பொருள் இப்போது விளங்குகிறதா ? இனிமேல் மறவாமல் தொண்ணூறு என்றே எழுதுங்கள்.

கரியில் தொடங்கி உமியில் முடியும் காளமேகப் புலவரின் பாடல்

ஆசுகவி புலவர் காளமேகம் எந்தச் சொல் கொடுத்துப் பாடல் பாடச் சொன்னாலும் உடனடியாகப் பாடுவார்.

ஒருமுறை அவரை ஏளனம் செய்ய நினைத்த பெண் ஒருவர் "கரி " என்று தொடங்கி "உமி " எனும் ஈற்றில் (முடிவுறும் சொல் ) பாடல் ஒன்றைப் பாடும்படியாகக் கேட்டுக்கொண்டார்.


உமி கரியாக மாறும் - கரி உமியாக மாறுமா ?


புலவர் காளமேகம்

அடுத்த நொடியில் - பாடிய பாடல் இதோ:


"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் _உருக்கமுள்ள

அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள்

உப்புக்காண் சீச்சீ யுமி "


தெளிவுரை :


அத்தை மகள்,அத்திக்காயைப் பொரியல் செய்து -

ஆசையாய் வாழைக்காயை நன்கு வதக்கி வைத்து

இளம்பிஞ்சு மாங்காயை பக்குவமாய் தயிர் விட்டு

ஈரமான பச்சடியை ஆசையாய் செய்து வைத்து-


உருண்ட கத்தரிக்காயை நெய்விட்டுத் துவட்டி -

ஊண் தின்னச்சொன்னாள், ஆசை மிகுதியினால்

எக்கச்சக்கமாய் உப்பு போட்டுவிட்டதினால், நான்

ஏமாந்து நின்று சீச்சியென உமிழ்ந்தேன்.


Wednesday, January 25, 2023

வகுப்பு 10 தமிழ் இலக்கணம் சிறுவினாக்கள் முழுவதும் தேர்வு வினாத்தாள் 10th tamil ilakkanam 3 marks qn

பத்தாம் வகுப்பு தமிழ் இலக்கணம் சிறுவினாக்கள் முழுவதும் தேர்வு வினாத்தாள் pdf 10th tamil ilakkanam all 3 marks grammar questions test

 பதிவிறக்கு/DOWNLOAD

மூன்றாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை வகுப்பு 6 - 9 third mid term exam time table VI TO IX VIRUDHUNAGAR DISTRICT

பத்தாம் வகுப்பு கணக்கு முதல் திருப்புதல் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் சனவரி 2023 10th maths English medium first revision exam question paper virudhunagar

பத்தாம் வகுப்பு கணக்கு முதல் திருப்புதல் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் சனவரி 2023 10th maths tamil medium first revision exam question paper virudhunagar

Monday, January 23, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் செய்யுள் சிறுவினாக்கள் முழுவதும் தேர்வு வினாத்தாள் 10th tamil poem all 3 marks

பத்தாம் வகுப்பு தமிழ் செய்யுள் சிறுவினாக்கள் முழுவதும் தேர்வு வினாத்தாள் pdf 10th tamil seyyul all 3 marks questions test

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் விருதுநகர் சனவரி 2023 10th English first revision exam question paper virudhunagar

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு நெல்லை வினாத்தாள் சனவரி 2023 10th tamil first revision exam question paper tirunelveli திருநெல்வேலி

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு pdf விருதுநகர் மாவட்டம் ஆங்கில வழி 1oth social science slow learners guide English medium virudhunagar district

பதிவிறக்கு/DOWNLOAD

Sunday, January 22, 2023

10ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 10th model notes of lesson tamil மார்ச் 27

 வகுப்பு 10

பாடம் - தமிழ்

தலைப்பு - திருப்புதல்

திருப்புதல் வினாக்கள்

1.     தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

2.    தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

3.    சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.               தமிழ்த்துகள்

4.    மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.                        குறிப்பு : இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் சளப் தளப் என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்.

5.    கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலை கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

6.    வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

கோலொடு நின்றான் இரவு     

- குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.                     தமிழ்த்துகள்

7.    மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

8.    மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்?  விளக்கம் தருக.                       தமிழ்த்துகள்

9.    உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

10.  வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

 

11.   நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு  எழுதுக.

12.  வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.                 தமிழ்த்துகள்

13.  பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

14.  முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவி பாடுகிறார்?

15.  பகர்வனர் திரிதிரு நகரவீதியும்

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்              தமிழ்த்துகள்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

அ. இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?               தமிழ்த்துகள்

ஆ. பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

இ. எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

ஈ. காருகர் - பொருள் தருக.                     

உ. இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

 

16.  பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.          தமிழ்த்துகள்              பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக்கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக்கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.           தமிழ்த்துகள்                                                                        சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை, ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன. தமிழ்த்துகள்

17.  வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

18.  "சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது" -  இடஞ்சுட்டிப் பொருள் தருக.

19.  எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

அடிபிறழாமல் எழுதுக.      தமிழ்த்துகள்

20.  அன்னை மொழியே... முதல் பேரரசு முடிய கனிச்சாறு பாடல்.

21.  தென்னன்... முதல் வாழ்த்துவமே முடிய கனிச்சாறு பாடல்.

22.  சிறுதாம்பு... எனத்தொடங்கும் முல்லைப்பாட்டு பாடல்.

23.  விருந்தினனாக... எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடல்.

24.  வாளால்... எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடல்.      தமிழ்த்துகள்

25.  அருளை... எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல்.

26.  புண்ணிய... எனத் தொடங்கும் திருவிளையாடற்புராணம் பாடல்.

27.  செம்பொனடி... எனத் தொடங்கும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடல்.

28.  தண்டலை... எனத் தொடங்கும் கம்பராமாயணப்பாடல்.

29.  வெய்யோன்... எனத் தொடங்கும் கம்பராமாயணப்பாடல்.          தமிழ்த்துகள்

30.  தூசும்... எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்.

31.   மாற்றம்... முதல் பாத்திரம் முடிய காலக்கணிதம் பாடல்.

32.  தலைவர் மாறுவர்... முதல் சட்டம் முடிய காலக்கணிதம் பாடல்.

33.  நவமணி... எனத் தொடங்கும் தேம்பாவணி பாடல்.    

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 3 கவிதைப்பேழை tamil model notes of lesson 6th unit 2 term 3

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

30-01-2023 முதல் 03-02-2023

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

எல்லாரும் இன்புற – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

பராபரக்கண்ணி, நீங்கள் நல்லவர்

6.பக்கஎண்

20 - 23

7.கற்றல் விளைவுகள்

T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

8.திறன்கள்

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற அறச்சிந்தனைகளை அறியும் திறன்.

வாழும் முறைகளை அறியும் திறன்.

9.நுண்திறன்கள்

அறஇலக்கியங்கள் கூறும் கருத்துகள் குறித்து அறிதல்.

அயல்நாட்டுக் கவிஞரின் சிந்தனைகளை அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2.html

https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_22.html

https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-qr-code-video_62.html

https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-2.html

https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-6th-tamil-paraparakanni.html

https://tamilthugal.blogspot.com/2020/02/paraabarakkanni.html

https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-qr-code-video_9.html

https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-neengal-nallavar-6th-tamil-kuruvina.html

11.ஆயத்தப்படுத்துதல்

வாழ்வியல் ஒழுக்கம் பற்றிக் கூறச்செய்தல்.

மொழிபெயர்ப்பு குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

தாயுமானவர், கலீல் கிப்ரான் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். பாடலின் சொற்களுக்கு அகராதி பார்த்துப் பொருள் அறிவது குறித்து விளக்குதல். தாயுமானவரின் வரிகளுக்குப் பொருள் கூறுதல்.

          மொழிபெயர்ப்பு குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். பாடல்களை விளக்குதல். வாழ்வைச் செம்மைப்படுத்தும் அயல்நாட்டவர் சிந்தனை குறித்து அறியச் செய்தல். குறிக்கோளின் இன்றியமையாமை குறித்து விளக்குதல்.



மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

பிறமொழி இலக்கியச் சிந்தனைகள் குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

          LOT – சுயம் என்பதன் பொருள் ...............................

          MOT – பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவதை விளக்குக.

HOT – குளிரால் வாடுபவர்களுக்கு உதவுதல் பற்றி எழுதுக.

          நல்லவர் என்னும் பெயர் பெற நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பிறர் மகிழும்படி நீ செய்த நிகழ்வுகளைக் கூறு.

உன்னுடைய நிறைகுறைகளைப் பட்டியலிடுக.


தமிழ்த்துகள்

Blog Archive