பத்தாம் வகுப்பு கணக்கு
Tenth Maths
Tamil medium
English medium
(தேர்வு-3)
1. r₁ அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு r₂ அலகுகள் ஆரமுடைய 8 சம கோளப்பந்துகளாக ஆக்கப்படுகிறது எனில் r₁ ∶ r₂ _____. A spherical ball of radius r₁ units is melted to make 8 new identical balls each of radius r₂ units. Then r₁ ∶ r₂ is ____.
2:1
1:2
4:1
1:4
2. இருசமபக்க முக்கோணம் ΔABC –யில் ∠C=90⁰ மற்றும் AC = 5 செ.மீ, எனில் AB ஆனது ___. If ΔABC is an isosceles triangle with ∠C=90⁰ and AC = 5 cm, then AB is ____.
2.5 செ.மீ
5 செ.மீ
10 செ.மீ
5√2 செ.மீ
3. r அலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக்கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு ____. If two solid hemispheres of same base radius r units are joined together along their bases, then curved surface area of this new solid is ____.
4πr² ச.அ
6πr² ச.அ
3πr² ச.அ
8πr² ச.அ
4. கோட்டுத்துண்டு PQ –யின் சாய்வு 1/√3 எனில், PQ –க்கு செங்குத்தான இருசமவெட்டியின் சாய்வு _____. If slope of the line PQ is 1/√3 then the slope of the perpendicular bisector of PQ is ____.
√3
-√3
1/√3
0
5. 6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சம தளத்தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன? Two poles of heights 6 m and 11 m stand vertically on a plane ground. If the distance between their feet is 12 m, what is the distance between their tops?
13 மீ 13 m
14 மீ 14 m
15 மீ 15 m
12.8 மீ 12.8 m
6. படத்தில் O –வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP = 11 செ.மீ மற்றும் BC = 7 செ.மீ எனில், BR –ன் நீளம் ___. In figure CP and CQ are tangents to a circle with centre at O. ARB is another tangent touching the circle at R. If CP = 11 cm and BC = 7 cm, then the length of BR is ____.
image_Url
6 செ.மீ 6 cm
5 செ.மீ 5 cm
8 செ.மீ 8 cm
4 செ.மீ 4 cm
7. சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக்கூற நாம் காண வேண்டியவை ____. When proving that a quadrilateral is a parallelogram by using slopes you must find ____.
இரு பக்கங்களின் சாய்வுகள் The slopes are parallel
இரு சோடி எதிர்ப்பக்கங்களின் சாய்வுகள் The slopes of two pair of opposite sides
அனைத்துப் பக்கங்களின் நீளங்கள் The lengths of all sides
இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள் Both the lengths and slopes of two sides
8. A={1,2,3,4},B={4,8,9,10} என்க. சார்பு f:A ⟶ B ஆனது f={(1,4),(2,8),(3,9),(4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f - என்பது ____. Let A={1,2,3,4} and B={4,8,9,10. A function f:A⟶B given by f={(1,4),(2,8),(3,9),(4,10)} is a ____.
பலவற்றிற்கு ஒன்றான சார்பு Many-one-function
சமனிச்சார்பு Identity function
ஒன்றுக்கொன்றான சார்பு One-to-one function
உட்சார்பு Into function
9. நிரல்கள் மற்றும் நிரைகள் சம எண்ணிக்கையில்லாத அணி ____. If number of columns and rows are not equal in a matrix then it is said to be a ____.
மூலைவிட்டஅணி diagonal matrix
செவ்வகஅணி rectangular matrix
சதுரஅணி square matrix
அலகுஅணி unit matrix
10. ஒரு கூட்டுத்தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில், பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத்தொடர்வரிசையில் அமையும்? The first term of an arithmetic progression is unity and the common difference is 4 which of the following will be a term of this A.P?
4551
10091
7881
13531
11. R={(x,x²) / x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது ____. The range of the relation R={(x,x²)/ x is a prime number less than 13} is _____.
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
Required
12. sin²θ+1/(1+tan²θ) – ன் மதிப்பு ____. The value of sin²θ+1/(1+tan²θ) is equal to _____.
tan²θ
1
cot²θ
0
13. வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்? How many tangents can be drawn to the circle from an exterior point?
ஒன்று one
இரண்டு two
முடிவற்ற எண்ணிக்கை infinite
பூஜ்ஜியம் zero
14. acotθ+bcosecθ=p மற்றும் bcotθ+acosecθ=q எனில் p²-q² – ன் மதிப்பு ____. acotθ+bcosecθ=p and bcotθ+acosecθ=q then p²-q² is equal to _____.
a²-b²
b²-a²
a²+b²
b-a
15. x²-2x-24 மற்றும் x²-kx-6 –யின் மீ.பொ.வ (x-6) எனில், k – யின் மதிப்பு ___. If (x-6) is the HCF of x²-2x-24 and x²-kx-6 then the value of k is____.
3
5
6
8
16. முதல் 20 இயல் எண்களின் விலக்கவர்க்கச்சராசரியானது ____. Variance of first 20 natural numbers is ____.
32.25
44.25
33.25
30
17. ஓர் ஏரியின் மேலே h மீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்றக்கோணம் β. மேக பிம்பத்தின் இறக்கக்கோணம் 45⁰ எனில், ஏரியில் இருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது (மீட்டரில்) ___. The angle of elevation of a cloud from a point h metres above a lake is β. The angle of depression of its reflection in the lake is 45⁰. The height of location of the cloud from the lake is ____.
(h(1+tanβ))/(1-tanβ)
(h(1-tanβ))/(1+tanβ)
htan(45⁰-β)
None of these
18. கமலம், குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு1/9எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை _____. Kamalam went to play a lucky draw contest. 135 tickets of the lucky draw were sold. If the probability of Kamalam winning is 1/9, then the number of tickets bought by Kamalam is ___.
5
10
15
20
19. ஓர் அரைக்கோளத்தின் மொத்தப்பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் _______ மடங்காகும்? The total surface area of hemi-sphere is how much times the square of its radius.
π
4π
3π
2π
20. f:A ⟶ B ஆனது இருபுறச்சார்பு மற்றும் n(B)=7 எனில் n(A) ஆனது ____. If f:A⟶Bis a bijective function and if n(B)=7, then n(A) is equal to ______.
7
49
1
14
21. ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்கவர்க்கச்சராசரியானது ______. The standard deviation of a data is 3. If each value is multiplied by 5 then the new variance is ____.
3
15
5
225
22. Y அச்சில் அமையும் புள்ளி A–யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B –யின் கிடைமட்டத்தொலைவு 5 எனில், AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு ____. If A is a point on the Y axis whose ordinate is 8 and B is a point on the X axis whose abscissa is 5 then the equation of the line AB is _____.
8x+5y=40
8x-5y=40
x=8
y=5
23. ஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரைபடம் ஒரு ____. Graph of a linear polynomial is a ___.
நேர்க்கோடு Straight line
வட்டம் circle
பரவளையம் parabola
அதிபரவளையம் hyperbola
24. யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தின் படி,a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு, தனித்த மிகை முழுக்கள் qமற்றும்r , a=bq+rஎன்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது, ____. Euclid’s division lemma states that for positive integers a and b, there exist unique integers q and r such that a=bq+r, where r must satisfy ____.
1<r<b
0<r<b
0≤r<b
0<r≤b
25. (5,7),(3,p) மற்றும் (6,6) என்பன ஒரு கோட்டமைந்தவை எனில் ,p –யின் மதிப்பு _____. If (5,7),(3,p)and(6,6)are collinear, then the value of p is ___.
3
6
9
12
26. 4x⁴-24x³+76x²+ax+b ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b–யின் மதிப்பு ____. The values of a and b if 4x⁴-24x³+76x²+ax+bis a perfect square
100, 200
10, 12
-120, 100
12, 10
27. ஒரு கோபுரத்தின் உயரம் 60 மீ ஆகும். சூரியனைக் காணும் ஏற்றக்கோணம்30⁰–லிருந்து 45⁰ ஆக உயரும் போது கோபுரத்தின் நிழலானது x மீ குறைகிறது எனில் x – ன் மதிப்பு ___. A tower is 60 m height. Its shadow is x metres shorter when the sun’s altitude is 45⁰ than when it has been 30⁰, then x is equal to ____.
41.92 மீ 41.92 m
43.92 மீ 43.92 m
43 மீ 43 m
45.6 மீ 45.6 m
28. A=2⁶⁵ மற்றும் B=2⁶⁴+2⁶³+2⁶²+ …+ 2⁰ எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உன்மை? If A=2⁶⁵ and B=2⁶⁴+2⁶³+2⁶²+ …+ 2⁰ which of the following is t rue?
B ஆனது A –ஐ விட 2⁶⁴ அதிகம் B is 2⁶⁴ more than A
A மற்றும் B சமம் A and B are equal
B ஆனது A ஐவிட 1 அதிகம் B is larger than A by 1
A ஆனது B –ஐவிட 1 அதிகம் A is larger than B by 1
29. ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7 –ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது _____. A page is selected at random from a book. The probability that the digit at units place of the page number chosen is less than 7 is ____.
3/10
7/10
3/9
7/9
30. ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ.மீ மற்றும் அதன் தடிமன் 4 செ.மீ ஆகும். உருளையின் உயரம் 20 செ.மீ எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கனஅளவு ____. In a hollow cylinder, the sum of the external and internal radii is 14 cm and the width is 4 cm. If its height is 20 cm, the volume of the material in it is ____.
5600π க.செ.மீ 5600π cm³
1120π க.செ.மீ 1120π cm³
56π க.செ.மீ 56π cm³
3600π க.செ.மீ 3600π cm³