கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, September 02, 2023

ஆசிரியர் நாள் வாழ்த்துக் கவிதை செப்டம்பர் 5

கட்டை விரலைக் கேட்கும் துரோணாச்சாரியார்கள் அல்ல! 
கணினியில் கலக்கும் கலியுக வரதர்கள்!?
வெகுளியில் சாபமிடும் விசுவாமித்ரர்கள் அல்ல!
வெற்றிப் பாதை வகுத்துக் கொடுக்கும் வழிகாட்டிகள்!
உடல் வருத்திப் பாடம் புகட்டும் ஆசான்கள் அல்ல!
உளம் மகிழக் கற்கத் தூண்டும்
உளவியலாளர்கள்!
பிரம்பெடுத்துப் பாடம் புரிய வைக்கும் பிச்சாடனர்கள் அல்ல!
நரம்பு புடைக்க நாவுரைத்து 
மாணவரைப் புடம் போடும் அர்ப்பணிப்பாளர்கள்!
கல்விக்கடலில் படகாய் 
கடும் கோடையில் தண்ணீராய்
பள்ளிக்கூடம் கோயிலாய் 
வெற்றிப்படி தொட ஏணியாய்ப் 
பணியாற்றும் ஆசிரியர்காள்!
எல்லாரும் கொண்டாடும் விதமாய் 
நம் சேவை தொடரட்டும்! 
பொல்லாப்பு மறைந்து 
புது வாழ்வு மலரட்டும்!

ஆசிரியர் தின வாழ்த்துகள்
SEPTEMBER 5 TEACHERS DAY WISHES

- கவிஞர் கல்லூரணி முத்துமுருகன்.

தமிழ்த்துகள்

Blog Archive