பாரதியார் பிறந்த நாள் சிறப்புக் கவிதை, பாடல்
Barathiyar special song
முண்டாசுக் கவி பாரதி
முண்டாசு கட்டிய கவிஞன் சுப்ரமணியன்
இவன் மனிதன்
வெள்ளைப் பரங்கியரை இந்த மண்ணை விட்டோட்டிய தீரன் அதிசூரன்!
பாடும் பாட்டில் கெட்டிக்காரன்!
எட்டயபுரத்தில் பிறந்தான் ஏடெடுத்தான் கவி வடித்தான்
எழுதும் பாட்டினிலே
இவனுக்கீடான புலவன் யாரு?
இங்கு யாரு?
பாரதியாரு
என்று கூறு!
தீண்டாமைக் கொடுமை எதிர்த்தான்
சாதி மறுத்தான்
பூணூல் அறுத்தான்
இங்கு எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் என்றே குரல் கொடுத்தான் அதை எதிர்த்தோர் வாயை அடைத்தான்
கொட்டுக கும்மி என்றான் பழமை வென்றான் பக்கம் நின்றான் பெண்கள் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரில் வேண்டும் என்றான்
பாப்பாப் பாட்டில் புத்தி சொன்னான்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
இல்லை தாழ்வு இது தீர்வு
இதை நன்றாக நெஞ்சினில்
நாட்டி விட்டாலே வெற்றி வரும் பற்றி என்றுமின்பம் நம்மைச் சுற்றி
-கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199