Necessity of Rainwater Harvesting Tamil Essay
மழைநீர்
சேமிப்பின் அவசியம்
முன்னுரை தமிழ்த்துகள்
மனித உடல்
உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு நாள் ஒன்றிற்கு சராசரியாக இரண்டு முதல் மூன்று
லிட்டர் நீர் தேவைப்படுகிறது. உணவு செரிப்பதற்கும், உடலில் இருந்து கழிவுப் பொருள்களை வெளியே அனுப்புவதற்கும்
நீர் அவசியமாகும். நீர் உடல் எடையில் சுமார் 60 - 70% ஆகும். எனவேதான் வான்புகழ்
வள்ளுவர் தமிழ்த்துகள்
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு என்றார். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள்,
இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர்
கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள்
வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
மழைநீர் சேமிப்பு தமிழ்த்துகள்
மழை பெய்யக் கூடிய பகுதிகளில் வடியும் நீரைச்
சேகரித்து, சேமித்தலே மழைநீர்
சேமிப்பு. பாலஸ்தீன், கிரீஸில் 4000 வருடங்களுக்கு முன்பே இந்த முறை வழக்கத்தில்
இருந்தது. பழங்கால ரோம் நகரத்தில், குடியிருப்புகளில்
தனித்தனியாக நீர்ப்பிடிப்பு குழிகள் கட்டப்பட்டுள்ளன. பாகிஸ்தான், கட்ச்
பகுதிகளில் உள்ள விவசாயிகள் மழை நீரை சேகரித்து, தங்கள் பாசனத்திற்குப்
பயன்படுத்தினர்.
நிலத்தடி நீரை அதிகப்படுத்துதல் தமிழ்த்துகள்
நிலத்தடி நீரை அதிகப்படுத்துவது என்பது நிலத்தடி
நீர் மட்டத்தை இயற்கைச் சூழ்நிலையில் அதிகப்படுத்துவது. வான்மழை பொழியும் வேளையில்
வீணாகும் நீரை மழைநீர் சேமிப்பு மூலம் பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீரை
அதிகரிக்கலாம். இதனால் ஆழ்துளைக் கிணறுகளின் நீர் மட்டம் அதிகரிக்கும்.
விண்ணின் மழைத்துளி, மண்ணின் உயிர்த்துளி என்பதை உணர்ந்தால் ஒவ்வொரு கட்டடத்தின்
மூலமும் பெருமளவு மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீரை அதிகப்படுத்தலாம். சிறுதுளி
பெருவெள்ளம் அல்லவா? தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
மழைநீர் சேமிப்பின் அவசியம் தமிழ்த்துகள்
நகரமயமாதலால் நிலத்தடி நீரின் அளவு குறைகிறது.
அதனால் நிலத்தடிநீரின் மட்டத்தை உயர்த்தி வேண்டியுள்ளது. இந்தியாவில் இது போன்ற பல
அமைப்புகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தண்ணீருக்காகத்தான் மூன்றாம்
உலகப்போர் நிகழும் என்பதை உணர்ந்து மழைநீரைச் சேமிக்க வேண்டும். தமிழ்த்துகள்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து தமிழ்த்துகள்
உள்நின்று உடற்றும் பசி என்று வள்ளுவர் உரைப்பதை எண்ணிப்பார்க்க
வேண்டும்.
மழைநீர் சேமிக்கும் முறைகள்
நிலத்தின்
மேல் வழிந்தோடும் நீரை எதிர்காலப் பயன்பாட்டிற்காகச் சேமிப்பதும், நிலத்தடி நீர் மட்டத்தை
உயர்த்துவதும் முக்கிய மழைநீர் சேமிப்பு முறைகளாகும். தமிழ்த்துகள்
வழிந்தோடும்
மழைநீரைச் சேமித்தல் என்பது பராம்பரிய முறையாகும். நிலத்தடித் தொட்டிகள், குட்டைகள், தடுப்பணைகள் போன்றவை இதில் அடங்கும். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்துதல் என்பது தமிழ்த்துகள்
குழிகள் - தாழ்வான பகுதிகளில் 1-2 மீட்டர் அளவு அகலம்
3 மீட்டர் ஆழமுள்ள புதிய குழிகளை சிறு கற்கள் கொண்டு சுற்றியும் அடியில் மணல் நிரப்பியும்
அமைத்தல்.
அகழிகள் - நீர் உட்செல்லும் போது, மிகக் குறைவான ஆழத்தில் அகழிகள்
அமைக்கப்படும். இதுவும் சுற்றியும் கல் கொண்டு, அடியில் மணல்
நிரப்பி அமைக்கப்படும். தமிழ்த்துகள்
கிணறுகள் - இருக்கின்ற கிணறுகளை இதற்குப் பயன்படுத்தலாம்.
கிணற்றில் நீரை விடுவதற்கு முன் வடிகட்டியின் மூலம் செலுத்தி பிறகு விடவேண்டும். தமிழ்த்துகள்
முடிவுரை
நெடுங்கடலும்
தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தமிழ்த்துகள்
தான்நல்கா
தாகி விடின்
என்ற உலகப்பொதுமறையின் பொருளறிந்து மழைநீரைச் சேமிக்க வேண்டும். ஒரு துளி
மழைநீரைக் கூட வீணாக்காமல் சேமித்து மண்ணின் வளம் காப்போம். மக்கள் துயர்
துடைப்போம். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி எதிர்காலத் தலைமுறையைக் காப்போம்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்