6th tamil model notes of lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
19-02-2024 முதல் 23-02-2024
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
எல்லாரும் இன்புற –
கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
பெயர்ச்சொல்,
திருக்குறள்
6.பக்கஎண்
32 - 40
7.கற்றல் விளைவுகள்
T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் சரியான சொற்கள்,
தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி
எழுதுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
அறுவகைப்
பெயர்கள், இடுகுறிப்பெயர், காரணப்பெயர்களை அறிதல்.
9.நுண்திறன்கள்
திருக்குறளின்
அறக்கருத்துகள் குறித்து அறிதல்.
கேட்ட தலைப்புகள்
பற்றிச் சொந்த நடையில் பேசுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_90.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_11.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_23.html
https://tamilthugal.blogspot.com/2022/01/3-2-peyarchol-tamil-ilakkanam-6th-q.html
https://tamilthugal.blogspot.com/2020/09/6th-tamil-matching-game-peyarchol.html
https://tamilthugal.blogspot.com/2020/08/6-3-2-6th-tamil-unit-2-term-3-ilakanam.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_96.html
https://tamilthugal.blogspot.com/2021/02/3-2-thirukkural-6th-tamil-kuruvina.html
11.ஆயத்தப்படுத்துதல்
அறிந்த பெயர்ச்சொற்களைக்
கூறச்செய்தல்.
திருக்குறள்
குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
பெயர்ச்சொல்
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
திருக்குறளின்
சிறப்புகளைக் கூறுதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பெயர்ச்சொல்
வகைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். இடுகுறிப்பெயர், காரணப்பெயர்
வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல். அறன் வலியுறுத்தல், ஈகை, இன்னா
செய்யாமை, கொல்லாமை, பெரியாரைப் பிழையாமை பற்றிக் கூறுதல்.
திருக்குறள் குறித்து
மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். குறள்களின் பொருளை விளக்குதல். வாழ்வைச்
செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
திருக்குறள் குறித்து விளக்குதல். குறள் கூறும் பல்வேறு
அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
LOT – ஏழைகளுக்கு உதவி செய்வதே
..............................
MOT
– அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.
HOT – உனக்குப் பிடித்த குறளையும் அதன் பொருளையும் எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீ அறிந்த காரணப்பெயர்களைக் கூறு.
திருக்குறள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.